

என்னளவில், திரைக்கதையை எழுதி முடித்ததும் எனது எல்லாத் திரைக்கதைகளையும் என்னுடைய உதவியாளர்களிடம், தயாரிப்பாளருக்குக் கதை சொல்வது போல் விவரித்துச் சொல்வதை வழக்க மாக வைத்திருக்கிறேன். அல்லது பவுண்டட் ஸ்கிரிப்ட் ஆகப் படிக்கச் சொல்லிவிட்டு, அனைவரும் படித்து முடித்ததும் அவர்களிடம் டிஸ்கஸ் செய்வேன்.
அப்படித்தான், ‘துப்பாக்கி’ படத்தின்திரைக்கதையை எனது உதவி இயக்குநர்களுக்குக் கொடுத்து அவர்கள் படித்து முடித்ததும் பேசியபோது, ஒரு குறிப்பிட்ட காட்சியைக் குறிப்பிட்டு, ‘ஒரு மாஸ் ஹீரோ ஆக்ஷனில் இறங்காமல், ஒரு துரோக அதிகாரியை இவ்வளவு பொறுமை யாக டீல் செய்து பேசிக் கொண்டிருப் பாரா?’ என்று கேட்டார்கள். நியாய மான சந்தேகம்தான். ஆனால், ‘அந்தக் காட்சியைத் திரையரங்கில் காணும்போதுதான், அது உருவாக்கும் தாக்கம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை உணர முடியும்’ என்று அவர்களுக்குச் சொன்னேன்.