

இரண்டு உச்ச நட்சத்திரங்கள் ஒரே படத்தில் இணைந்து நடிக்க ஒப்புக்கொள்வது அபூர்வம். அதை ‘ஜில்லா’ படத்தின் மூலம் சாதித்தவர் ஆர்.டி.நேசன். மோகன்லால் கேரளத் தின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக இருந்தாலும் ‘ஜில்லா’ படத்தில், விஜயின் வளர்ப்புத் தந்தையாக அவர் தோன்றினார். மோகன்லால் - விஜய் கூட்டணியை எப்படி அமைந்தது? ‘ஜில்லா’ உருவான நாள்களை நோக்கி தன் நினைவுகளை நமக் காகத் திருப்புகிறார் இயக்குநர் ஆ.டி.நேசன்.
“விஜய் அண்ணாவுக்கு எப்படித் தமிழ்நாட்டில் ரசிகர்கள் நிறைந்திருக் கிறார்களோ, அதேபோல் கேரளத்தில் லாலேட்டன் சாருக்கு வீட்டுக்கு வீடு ரசிகர்கள் உண்டு. மம்மூட்டி யின் ரசிகர்களும் அவரைக் கொண்டாடுவார்கள். அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே கிடையாது. லாலேட்டன் சார் - விஜய் அண்ணாஇருவருக்கும் பல திறமைகள் ஒத்துப்போகும். அந்தத் துருதுருப்பு, சுறு சுறுப்பு, நகைச்சுவை உணர்வு, நடிப் பதே தெரியாமல் நடிப்பது எனப் பல விஷயங்களில் இருவருமே கில்லாடி கள். அதைவிட முக்கியமான ஓர்ஒற்றுமை, எந்த மொழி ரசிகருக்கும் இருவரையும் பார்த்ததுமே பிடித்து விடும். அதனால்தான் கேரளத்தில் விஜய் அண்ணாவுக்கு அவ்வளவு ரசிகர்கள். ஒரு புதுமுக இயக்குநராக வளர்ந்து கொண்டிருந்த எனது படத்தில் இவர்கள் இரண்டு பேரும் நடிக்க ஒப்புக்கொண்டது பெரிய அதிர்ஷ்டம்! கதை சொன்ன நாளில் தொடங்கி, படப்பிடிப்பின் கடைசி நாள் வரை என்னை ஒரு புதுமுக இயக்குநராக இரண்டு பேருமே பார்க்கவில்லை.