தலையில்லாத கிராமம்! | சினிப்பேச்சு

தலையில்லாத கிராமம்! | சினிப்பேச்சு
Updated on
1 min read

அழுத்தமான பொழுதுபோக்குக் கதைகள், ஆழமான உணர்வு நிரம்பிய கதாபாத்திரங்கள் என தேர்வு செய்து நடித்துவரும் கார்த்தியின் 29வது படமாக உருவாகிறது ‘மார்ஷல்’. ’சார்தார் 2’ படத்தில் நடித்து முடித்துள்ள கார்த்தியின் ‘மார்ஷல்’ படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ‘டாணாக்காரன்’ படத்தின் மூலம் பேசப்பட்ட தமிழ் இயக்குகிறார்.

ராமேஸ்வரம் கடற்கரை கிராமம் ஒன்றில் நடக்கும் கதை. இன்று ராமேஸ்வரத்திலேயே படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியிருக்கும் நிலையில், படத்தின் தலைப்புடன் கூடிய போஸ்டரை படக்குழு வெளியிட் டுள்ளது. அதில் கார்த்தியின் தலையில்லை. ஆனால், அவரது கடலோரக் கிராமத்தின் பின்னணி நன்கு விளங்குகிறது. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிப்பவர் கல்யாணி பிரியதர்ஷன்! இப்படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்க சத்ய சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார்.

‘ஸ்மார்ட் போன்’ வைத்திருக்கும் அனைவருக்கும்... - இளையராஜாவின் புகழ்பெற்ற நடனப் பாடல்களின் இசைத் துணுக்குகளுக்கு அட்டகாசமாக நடனமாடி பிரியாலயா வெளியிட்டு வரும் இன்ஸ்டகிராம் காணொளிகள் மில்லியன்களில் வியூஸ் அள்ளுகின்றன. இதுவரை மூன்று படங்களில் நடித்திருந்தாலும் தற்போது ராம் பிலிம் பேக்டரி தயாரிப்பில் சிவராஜ் இயக்கியிருக்கும் ‘டிரெண்டிங்’ படத்தில் கலையரசன் ஜோடியாக நடித்திருப்பது தன்னை அடுத்தகட்டத்துக்கு அழைத்துச் செல்லும் என்று நம்புகிறார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்திருந்த பிரியாலயா, “இப்படத்தின் ஆடிஷன் முடிந்து நான் செலக்ட் ஆனபோது மகிழ்ச்சியைவிட பயம்தான் அதிக மானது. காரணம், கலையரசன்கூட நடிக்க வேண்டும். இப்படத்தில் நடித்தபோது உண்மையிலேயே அவர் கலைக்கு அரசன்தான். நடிப்பில் அசுரன்தான். அவரது நடிப்புக்கு ஈடுகொடுத்திருக்கி றேன். நடிக்க அதிக வாய்ப்புள்ள கதாபாத்திரம். இது ஒரு எமோஷனல் ரோலர் கோஸ்டர். ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவரும் பார்க்க வேண்டிய படம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in