

இன்றும் பெரும்பான்மை வெகுஜன இந்திய ரசிகர்கள் சினிமாவை வெறும் மூன்றாந்தரப் பொழுதுபோக்காக விரும்புவதே நாம் உலக சினிமாவை எட்ட முடியாமல் இருப்பதற்கு உண்மையான காரணம். இதைத் திரை சொல்லியில் வெளியான படங்களின் அறிமுகத்தின் வழி உணர முடிந்தது. உலகமயமாக்கலுக்குப் பிறகு இணையவழியாக உலகின் பல மொழிப் படைப்புகள் பார்வைக்கு எளிதானதால், இளைய தலைமுறையின் புதிய படைப்புகளில் வித்தியாசங்களைக் காண முடிகிறது.
இது நல்ல தொடக்கமே. என்றாலும் குறை வளர்ச்சியுடன் எடுக்கப்படும் கலைப்போலி படங்கள் என்று இவற்றை விசுவாமித்திரன் சிவக்குமார் குறிப்பிடுகிறார். அதை ஏற்று தம்மை மாற்றிக்கொள்ள இளைய தலைமுறைப் படைப்பாளிகள் முன்வர வேண்டும். அதற்கு இலக்கிய வாசிப்புடன் சமகாலச் சமூகத்தையும் அரசியலையும் கூர்ந்து அவதானிப்பது முக்கியம் என்கிறார். ‘திரை சொல்லி’ ஒரு தேர்ந்த, கண்டிப்பான திரைப்பட ஆசிரியரை எங்களுக்கு அடையாளம் காட்டியது. - அ. யாழினி பர்வதம், சென்னை.78.