

எளிய பின்னணியிலிருந்து வந்து சினிமாவில் சாதித்தவர்களின் பட்டியலில் புதிய கணக்கை எழுதியிருப்பவர் சூரி. வெள்ளந்தியான தெற்கத்தி வட்டாரப் பேச்சு வழக்கைத் தன்னுடைய கவசக் குண்டலம் போல் பாதுகாத்துவரும் அவரை ‘விடுதலை’ திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் உயர்ந்த இடத்துக்குத் தூக்கிச் சென்றன.
‘கருடன்’ அவரை ஒரு ஆக்ஷன் நாயகனாகவும் அடையாளம் காட்டியது. இதற்கிடையில், உலக சினிமா பார்வையாளர்களுக்காக உருவான ‘கொட்டுக்காளி’யிலும் தன்னுடைய தரமான பங்களிப்பைத் தந்தார். இப்போது அவரே கதாசிரியராக மாறி, நாயகனாகவும் நடித்திருக்கும் ‘மாமன்’ படம் வெளியாகிறது. இச்சமயத்தில் இந்து தமிழ் திசைக்கு அவர் அளித்த பிரத்யேக நேர்காணல் இது.