

‘சுறுசுறுப்பின் மறுபெயர் கே.எஸ்.ரவிகுமார்’ என்கிறது கோடம்பாக்கம். நடிகர் திலகத்தையும் ரஜினியையும் வைத்து இவர் இயக்கிய ‘படையப்பா’ தமிழ் சினிமாவின் வர்த்தக வெற்றியில் ஒரு மைல்கல். ரஜினி - கமல் ஆகிய இரு பெரும் உச்ச நட்சத்திரங்களுக்குத் தமிழ் ரசிகர்களால் மறக்க முடியாத கமர்ஷியல் வெற்றிகளைக் கொடுத்தவர். ‘கோச்சடையான்’ எந்த இயக்குநரும் முயலாத தனித்த சாதனை. விஜய் - அஜித் இருவரையும் இயக்கியவர்.
நகைச்சுவை, சென்டிமெண்ட், காதல், ஆக்ஷன் ஆகியவற்றைச் சரியான கலவையில் கொடுப்பதில் கில்லாடி எனப் பெயர் பெற்ற இவரது இயக்கத்தில். ‘மின்சாரக் கண்ணா’ படத்தில் நடித்தார் விஜய். இந்தப் படத்தின் மீது 2019இல் மீண்டும் புகழ் வெளிச்சம் பாய்ந்தது. அந்த ஆண்டில் 5 ஆஸ்கர் விருதுகளை அள்ளிய கொரியத் திரைப்படமான ‘பாராசைட்’, ‘மின்சாரக் கண்ணா’வின் அப்பட்டமான காப்பி என ஊடகங்கள் குறிப்பிட்டுக் காட் டின. அப்படிப்பட்ட ‘மின்சாரக் கண்ணா’ படம் உருவான நாள்களைப் பற்றி இந்த அத்தியாயத்தில் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார்.