

டாக்டர்கள், இன்ஜினியர்கள் சினிமாவில் நடிக்க வருவது புதிதல்ல. ஆனால், சாய் கார்த்தி ஒரு பிஸியான மருந்தாளுநர். ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே’, ‘ஜெகமே தந்திரம்’ ஆகிய படங்களில் தொடங்கி தமிழ் சினிமாவில் நடிகராக வளர்ந்து வருகிறார்.
மற்றொரு பக்கம், புற்றுநோய் சிகிச்சையில் முக்கிய அங்கம் வகிக்கும் மருந்து, மாத்திரைகளைப் பாதி விலையிலும், அதையும் வாங்க முடியாத நிலையில் இருப்பவர்களுக்கு அவற்றை மருந்து நிறுவனத்திடமிருந்து இலவசமாகவும் பெற்றுக்கொடுத்து வருகிறார். உண்மையில் இவருடைய களம், சினிமாவா, சேவையா? அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி: