விஜயை இயக்கியதால் விமர்சிக்கப்பட்டேன்! | ப்ரியமுடன் விஜய் - 16

விஜயை இயக்கியதால் விமர்சிக்கப்பட்டேன்! | ப்ரியமுடன் விஜய் - 16
Updated on
3 min read

கடந்த 50 ஆண்டுகளில் 75 படங்களை இயக்கிச் சாதனை படைத்திருப்பவர் எஸ்.ஏ.சந்திரசேகர். தனது பெரும்பாலான படங்களில் சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு திரைக்கதை அமைத்ததால், ‘புரட்சி இயக்குநர்’ என்று கொண்டாடப் படுபவர். அதிகார வர்க்கத்தை எதிர்க்கும் ‘கோபக்கார இளைஞன்’ கதாபாத்திரங்களின் வழியாக விஜயகாந்தைத் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக்கினார். ‘நடிகனாக வேண்டும்’ என்கிற தன்னுடைய மகன் விஜயின் விருப்பத்தை முதலில் ஏற்க மறுத்தவர், பின்னர் அவரது உறுதியைப் பார்த்து, கல்லூரி மாணவனாக இருந்த அவரைத் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகப்படுத்தி வளர்த்தெடுத்தார். விஜயைத் திரையில் உருவாக்கிய காலத்தில், மகனுக்காக இயக்கிய ஒரு சில படங்களைக் குறிப்பிட்டு இவர் மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அதையெல்லாம் சட்டை செய்யாமல் திரையுலகில் விஜயை நடை பழக்கி, அவரை மக்களின் நாயகனாக உயர்த்திய நாள்களை ப்ரியமுடன் இங்கே பகிர்ந்துள்ளார்:

“நடிகனாக வேண்டும் என்கிற விஜயின் கனவை ஒரு அப்பாவாக நிறைவேற்ற வேண்
டிய கடமை எனக்கு இருந்தது. 18 வயது விஜயைக் கதாநாயகனாக அறிமுகப்படுத்திய போது, அவரது தோற்றத்துக்கும் வயதுக்கும் ஏற்ப ஓர் இயக்குநராக, எப்படிப்பட்டக் கதை
பண்ண வேண்டும் என்கிற திட்டம் என்னிடம் இருந்தது. விஜயகாந்த் ஒரு வெற்றி நாயக
னாக எனது இயக்கத்தில் எப்படி உருவாகி வந்தார் என்பதை மக்கள் அறிவார்கள். அதே
போல்தான் விஜய்யையும் அணுகினேன். நடிகனாக வேண்டும் என்கிற கனவை வரித்துக்
கொண்டுவிட்டார். அவரை அறிமுகப்படுத்து வது பெரிதல்ல; ஆனால், அவரைச் சரியான ஒரு இடத்துக்குக் கொண்டு போய் நிறுத்த வேண்டும் என்கிற சவால், ஒரு தந்தையாகவும் ஒரு இயக்குநராகவும் எனக்கிருந்தது.
அப்படித்தான் ‘ரொமாண்டிக் ஹீரோ’வாக தொடங்கிய அவரது பயணம், அடுத்து குடும்பம் என்கிற கட்டமைப்புக்குள் ஆழமாகப் பிணைந்திருக்கும் ஒரு ‘ஃபேமிலி ஹீரோ’வாக அவரைக் கொண்டு செல்லவேண்டும் என்று நினைத்தேன். அப்போது ‘பூவே உனக்காக’, ‘லவ் டுடே’, ‘காதலுக்கு மரியாதை’ போன்ற படங்கள் அவருக்கு அமைந்தன. இந்தக் குடும்பப் படங்களின் தொடர்ச்சி வேண்டும் என்பதற்காகவே தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற ‘பெள்ளி சண்டடி’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ரூ.50 லட்சம் கொடுத்து வாங்கினேன். 90களின் இறுதியில் அது மிகப்பெரிய தொகை. அந்தப் படத்தைப் பார்த்த விஜய்: ‘இது என்னப்பா இவ்வளவு ஓல்டான கதையாக இருக்கு. மாடர்னாக எதுவுமே இல்லையே? இதில் நான் நடிக்க மாட்டேன்’ என்று சொல்லிவிட்டார். ஒன்றரை வருடம் இப்படியே அந்தக் கதையைத் தள்ளி வைத்துவிட்டார். ‘பெள்ளி சண்டடி’ படத்தை இயக்கியவரே தமிழிலும் இயக்குகிறேன் என்று தேடி வந்துவிட்டார். அப்போதும் விஜய் பிடி கொடுக்கவில்லை. அப்போது விஜயிடம் சொன்னேன்: ‘இந்தப் படம் ஜெயித்தால் இதை தேவையானி படம் என்றோ, ரம்பா படம் என்றோ சொல்ல மாட்டார்கள்; விஜய் படம் என்றுதான் சொல்வார்கள். உன்னுடைய சம்பளம் உயரும்’ என்று வற்புறுத்தினேன். அப்போது, ‘படம் தோற்றாலும் ‘விஜய் பிளாப் கொடுத்துவிட்டார்’ என்றுதான் சொல்வார்கள்’ என்றார். விருப்பமில்லாமல்தான் ‘பெள்ளி சண்டடி’யின் தமிழ் ரீமேக்கான ‘நினைத்தேன் வந்தாய்’ படத்தில் நடித்தார். படம் மிகப்பெரிய ஹிட்!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in