

ஆஸ்கர் விருதுப் போட்டிக்கு உயரிய மதிப்பைத் தருவது சர்வதேசத் திரைப்படங்களுக்கான போட்டிப் பிரிவு. பல்வேறு நாடுகளின் நிலவெளிகளில் உலவும் மனிதர்களது யதார்த்த வாழ்க்கை முறையைப் பற்றி, உலகளாவிய பார்வைக்குப் பகிர்ந்து கொள்வது. உலகின் முக்கால்வாசி நாடுகளிலிருந்து ஆஸ்கருக்குச் செல்லும் படங்கள், முதல் சுற்றுத் தேர்வைத் தொட்டு, அடுத்தடுத்தச் சுற்றுகளில் வடிகட்டப்பட்டு, இறுதிச் சுற்றில் 5 படங்களின் பட்டியல் வெளியாகும். இதில் இடம்பெறுவதே இமாலயச் சாதனைதான்.
2025ஆம் ஆண்டுக்கான விருது பெறும் படங்கள் வரும் மார்ச் 2ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கின்றன. இறுதி செய்யப்படும் 5 படங்களில் விருதுக்குத் தகுதியான படம் எது என ஆங்கில விமர்சகர்கள் கணிப்புகளை முன்வைப்பது வழக்கம். தமிழில் நாம் அதனைத் தொடங்கி வைப்போம்.