வீட்டை விட்டு ஓடிப்போன விஜய்! | ப்ரியமுடன் விஜய் - 13

வீட்டை விட்டு ஓடிப்போன விஜய்! | ப்ரியமுடன் விஜய் - 13
Updated on
3 min read

ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய ‘ஒயிலாட்டம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் சி.ரங்கநாதன். அதன்பிறகு ‘இந்தியன் 2’ வரை பல படங்களில் நடித்திருந்தாலும் வரிசையாக மூன்று வெற்றிப் படங்களைக் கொடுத்த சூப்பர் ஹிட் இயக்குநர் என்பதுதான் இவரது அடையாளம். அந்த மூன்றில் முதலாவது வெற்றி, விஜயை வைத்து இவர் இயக்கிய ‘கோயமுத்தூர் மாப்ளே’(1996). இன்றைக்கும் விஜய் ‘வணக்கங்கண்ணா.. சரிங்கண்ணா’ என மரியாதை நிறைந்த கொங்கு வட்டார வழக்கில் பேசும் தாக்கத்தை தந்தது இவரும் இவருடைய படமும்தான். எஸ்.ஏ.சந்திரசேகரனின் வெற்றிகரமான உதவியாளர்களில் ஒருவரான ரங்கநாதன், ‘கோயமுத்தூர் மாப்ளே’ படம் உருவான நாள்களை நோக்கி தன் நினைவுகளை மீட்டுத் தந்துள்ளார். இதில் இதுவரை வெளித்தெரியாத பல தகவல்கள் சுவாரசியம் கூட்டுகின்றன. இனி அவர் உங்களோடு:

“சென்ட்ரல் ஸ்டுடியோ, பக்‌ஷிராஜா ஸ்டுடியோஸ், மாடர்ன் தியேட்டர்ஸ் என்று சினிமாவைக் கட்டியாண்ட பூமி கொங்கு மண்டலம். மிகப்பெரிய நட்சத்திரங்களையும் இயக்குநர்களைக் கொடுத்த கோவையிலிருந்து தான் நானும் கோடம்பாக்கத்துக்கு வந்தேன். எண்பத்தியிரண்டிலிருந்து நான் சினிமாவில் வருவதற்கு முயன்றுகொண்டிருந்தாலும் 1987இல் எங்கள் டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன், விஜயகாந்த் - சீதா - கௌதமி ஆகியோரின் நடிப்பில் இயக்கிய ‘ராஜநடை’ படத்தில்தான் அவரிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தேன். அப்போது விஜய் பள்ளி மாணவர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in