

இரண்டு நாடுகளுக்கிடையே நடக்கும் போர் என்னும் ஆயுத விளையாட்டில் யார் வென்றாலும், யார் தோற்றாலும் உயிர் மற்றும் உடைமைகளை முற்றிலுமாக இழப்பது எளிய வாழ்வை மேவும் அப்பாவி மக்கள் மாத்திரமே. அவர்களின் மத்தியிலும் மனிதமார்ந்த நேயத்தைக் கை விடாமல் பாதுகாக்கும் ஆன்மர்கள் ஆங்காங்கு இருக்கவே செய்கிறார்கள்.
அத்தகைய நல்லுள்ளம் வாய்க்கப் பெற்றவர்கள் குறித்து உலக சினிமாவில் நிறையத் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக, போர்ச் சூழலில் வேற்றுமை பாராமல், நேய மாண்போடு உதவிகளைச் செய்யத் துணியும் கருணை வடிவிலான பல மனிதநேயக் கதாபாத்திரங்கள் திரைப்பரப்பை மேலும் ஒளிப்படுத்தி யிருக்கின்றன.