

இன்றைய முன்னணி இயக்குநர்கள் பலரும் ‘பாட்டில் ராதா’ படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்துவிட்டு அப்படத்தைப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்கள். அதற்குக் காரணம், இன்று மாநிலத்தின் முக்கியப் பிரச்சினையாகப் பெரும் சீரழிவை உருவாக்கியிருக்கும் மதுப் பழக்கத்துக்கு எதிரான படமாக, அதேநேரம் ரசிக்கத்தக்க விதத்தில் ஒரு பொழுதுபோக்கு படமாகவும் உருவாகியிருக்கிறது என்று குறிப்பிட்டிருக் கிறார்கள்.
இந்தப் படத்தை இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக் ஷன்ஸ் - பலூன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. தினகரன் சிவலிங்கம் என்கிற புதுமுக இயக்குநரின் படைப்பாக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் நான்கு முக்கிய முதன்மைக் கதாபாத்திரங்களில் குரு சோமசுந்தரம், சஞ்சனா, ஜான் விஜய், மாறன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.