கோடம்பாக்கம் சந்திப்பு: ஸ்ருதி ஹாசனின் தயாரிப்பு!

கோடம்பாக்கம் சந்திப்பு: ஸ்ருதி ஹாசனின் தயாரிப்பு!
Updated on
1 min read

ஸ்ருதி ஹாசனின் தயாரிப்பு!

திரையரங்குகள் மற்றும் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம் ‘லென்ஸ்’. அதன் இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன். இவரது இயக்கத்தில் அடுத்து உருவாக இருக்கும் படம் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி’. இதைத் தனது இஸிட்ரோ மீடியா சார்பில் தயாரித்து வெளியிடுகிறார் நடிகை ஸ்ருதிஹாசன். நான்கு நண்பர்களின் உரையாடல்தான் படமாம். உரையாடலைத் திரைக்கதையாகப் படித்துப் பார்த்த ஸ்ருதி ஹாசன், இதைத் தயாரிக்க முன்வந்திருக்கிறார்.

5 குறும்படங்களுக்கு அதிர்ஷ்டம்!

டிஜிட்டல் திரையிடல் சந்தையில் கோலோச்சிவரும் நிறுவனங்களில் ஒன்று க்யூப். ‘ஃபர்ஸ்ட் கிளாப்’ என்ற பெயரில் குறும்படப் போட்டிகளை நடத்திவரும் க்யூப், இந்த ஆண்டு நடத்திய போட்டியில் ‘குக்கருக்கு விசில் போடு’ (இயக்கம் ஷியாம் சுந்தர்), ‘கல்கி’ (இயக்கம் விஷ்ணு), ‘கம்பளிப்பூச்சி’ (இயக்கம் V.G. பாலசுப்ரமணியன்), ‘மயிர்’ (இயக்கம் லோகி), ‘பேரார்வம்’ (இயக்கம் சாரங்கு தியாகு) ஆகிய ஐந்து படங்களைத் தேர்ந்தெடுத்துப் பரிசுகளை வழங்கியிருக்கிறது.

ChennaiCITYBa31MPKUMARjpgjpg

சி.வி.குமார் அடுத்து...

ரசனையும் தரமும் கொண்ட படங்களின் தயாரிப்பாளராக அறியப்பட்டவர் சி.வி.குமார். ‘மாயவன்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் மாறிய இவர், தற்போது ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ என்ற தனது இரண்டாவது படத்தை இயக்கித் தயாரிக்க இருப்பதை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். கதாநாயகியை மையப்படுத்திய கேங்ஸ்டர் ரகக் கதையாம் இது. புதுமுக நடிகை முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in