

அஜித் நடிப்பில் ஹைதராபாத்தில் வளந்து வரும் ‘விசுவாசம்’ படத்தில் கவனம் செலுத்திய நயன்தாரா தற்போது தனது புதிய படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். சென்னை, பொள்ளாச்சியில் இப்படத்தின் முக்கிய காட்சிகள் படமாகிறது. ‘லட்சுமி’, ‘மா’ ஆகிய குறும்படங்களை இயக்கிய கே.எம்.சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் படம் இது.
கிராமம், நகரப் பின்னணி கதைக்களமாகக் கொண்ட இப்படத்தில் தன்னுடன் ‘கோலமாவு கோகிலா’ திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரம் ஏற்ற யோகிபாபுவின் நடிப்பு பெரிதாக ஈர்த்ததால் இப்படத்திலும் முக்கிய கதாபாத்திரம் அளிக்க வேண்டும் என படக்குழுவிடம் அவருக்கு சிபாரிசு செய்து நடிக்க வைக்கிறார், நயன்தாரா.