

நடிகர் சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘2-டி’ கம்பெனி வழியே சூர்யா, கார்த்தி இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்துக்கான கதை கேட்பதில் மும்மரம் செலுத்தி வருகிறார்கள். இதன் முதல்கட்டமாக 3 இயக்குநர்களிடம் கதை கேட்கும் வேலையும் நடந்துள்ளது. கார்த்தி நடிப்பில் விரைவில் வெளிவர உள்ள ‘கடைக்குட்டி சிங்கம்’, சூர்யா நடிப்பில் வர உள்ள ‘என்ஜிகே’ ஆகிய படங்களின் முழு வேலைகள் முடிந்ததும் இப்பட அறிவிப்பு இருக்கும் என்று தெரிய வருகிறது