மும்பை கேட்: சீனாவில் ‘ஏக் பிரேம் கதா’

மும்பை கேட்: சீனாவில் ‘ஏக் பிரேம் கதா’
Updated on
1 min read

அக்‌ஷய் குமார் நடிப்பில் சென்ற ஆண்டு வெளியான ‘டாய்லெட் - ஏக் பிரேம் கதா’ திரைப்படம் இப்போது சீனாவில் ஹிட்டடித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை சீனாவில் வெளியான இப்படம், இந்திய ரூபாய் மதிப்பில் இதுவரை சுமார் 61 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இர்ஃபான் கானின் ‘இந்தி மீடியம்’, சல்மான் கானின் ‘பஜ்ரங்கி பைஜான்’, அமீர் கானின் ‘தங்கல்’ போன்ற படங்கள் ஏற்கெனவே சீனாவில் வெளியாகி வசூலில் சக்கைபோடு போட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியன் பிலிம் அகாடெமி விருதுகள் (IIFA) வழங்கும் விழா வரும் ஜூன் 22 முதல் 24 வரை பாங்-காக்கில் நடைபெறுகிறது. ரிதேஷ் தேஷ்முக் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் இந்த விழாவில் ரன்பீர் கபூர், ஷாகித் கபூர், வருண் தவான், அர்ஜுன் கபூர் என பெரும் நட்சத்திரப் பட்டாளம் கலை நிகழ்ச்சிகளை வழங்க இருக்கிறது. பாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவரான ரேகா 20 ஆண்டுகளுக்குப் பிறகு மேடையேறி நடனமாட இருக்கிறார். இந்திய சினிமாவின் சிறந்த சாதனையாளருக்கான விருதை அனுபம் கெர் பெற இருக்கிறார்.

‘தனு வெட்ஸ் மனு’, ‘ராஞ்சனா’ போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் எல்.ராய், தற்போது ஷாருக்கானை வைத்து இயக்கியிருக்கும் ‘ஜீரோ’ படத்தின் டீஸர் வெள்ளோட்டம் இன்று வெளியாகிறது. கத்ரீனா கைஃப், அனுஷ்கா சர்மாவுடன் ஷாருக் நடனம் ஆடும் காட்சிகள் டீஸரில் இடம்பெறுகின்றன. இந்த ஆண்டு பாலிவுட்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் திரைக்கதையை ஹிமான்ஷு சர்மா எழுதியிருக்கிறார். இதில் சமீபத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி சிறப்புத் தோற்றத்தில் வருகிறார்.

தொகுப்பு: சு.அருண் பிரசாத்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in