

ராதிகா ப்ரீத்தி நடிப்பில் சமீபத்தில் கன்னடத்தில் வெளியான ‘ராஜா லவ்ஸ் ராதே’ படத்தைத் தொடர்ந்து அடுத்து அவரது நடிப்பில் தமிழில் ‘எம்பிரான்’ என்ற படம் உருவாகி வருகிறது. ‘‘பூர்வீக பூமி கன்னடமாக இருந்தாலும் தமிழில் அதிக படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். அதுவும் மாடர்ன் கதாபாத்திரம் என்றால் ரொம்ப இஷ்டம். கிளாமர் வேண்டாம். தற்போது நடித்துள்ள எம்பிரான் படத்தில் நானே தமிழில் டப்பிங் பேசியுள்ளேன். முதல் படத்திலேயே எப்படி? என பலரும் ஆச்சர்யப்படுகிறார்கள். தமிழ் பிடிக்கும்’’ என்கிறார், ராதிகா ப்ரீத்தி. ‘எம்பிரான்’ படத்தை இயக்குநர் மகிழ்திருமேனியின் உதவியாளர் கிருஷ்ண பாண்டி இயக்குகிறார்.