

ஜான் ஆபிரஹாம் நடித்துமுடித்திருக்கும் ‘பர்மனு - த ஸ்டோரி ஆஃப் பொக்ரான்’ இன்று வெளியாகிறது. தனது ‘சத்யமேவ ஜெயதே’ பட வேலைகளுக்கு மத்தியில் ‘அட்டாக்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள ஆக்ஷன் சீரிஸ் படங்களின் முதல் பாகத்தைத் தொடங்க இருக்கிறார். தன்னுடைய சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ஜே.ஏ. எண்டர்டெயின்மெண்ட் மூலமாக இப்படத்தைத் தயாரிக்கும் ஜான், 2019 ஜனவரியில் இதன் முதல் பாகத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளார். டெல்லி காவல்துறைக்கும் மதத் தீவிரவாத அமைப்புக்கும் இடையில் நடந்த மோதல் சம்பவங்களின் அடிப்படையில் அமையப்போகும் இந்தப் படத்தின் திரைக்கதை வேலைகள் முழுவீச்சில் நடைபெற்றுவருவதாகப் படக்குழு தெரித்திருக்கிறது.
ரன்பீருக்கு ஒரு கோடி!
மும்பை வான்கடே மைதானத்தில் மே 27-ல் நடைபெறவுள்ள ஐ.பி.எல். போட்டிகளின் நிறைவு விழாவான ‘கிரிக்கெட் ஃபைனல் பார்ட்டி தோ பன்டி’ நிகழ்ச்சியை நடிகர் ரன்பீர் கபூர் தொகுத்து வழங்க இருக்கிறார். இதற்காக ரன்பீருக்கு சுமார் கோடி ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன கரீனா கபூர், சோனம் கபூர் ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்குபெற இருக்கிறார்கள். இதில், இவர்கள் நடித்திருக்கும் ‘வீரே டி வெட்டிங்’ படத்தைப் பிரபலப்படுத்த இருப்பதும் ஒரு காரணம்.
அமைரா அடுத்து…
‘சைஸ் ஸீரோ’ படத்தின் மூலம் புகழ்பெற்றவர் தெலுங்கு இயக்குநரான பிரகாஷ் கோவேலமுடி. இவர் அடுத்து இந்திப் படம் ஒன்றை இயக்குகிறார். ‘மென்டல் ஹை கியா’ என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ‘அநேகன்’ படப் புகழ் அமைரா தஸ்தூர் இணைகிறார். ராஜ்குமார் ராவ், கங்கனா ரனாவத் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப் படத்தில் ராஜ்குமாரின் காதலியாகத் தோன்ற இருக்கிறார் அமைரா. கங்கனாவும் இப்படத்தின் திரைக்கதையாசிரியரான கனிகா தில்லானும் 2014-ல் வெளியான ‘குயின்’ படத்துக்குப் பிறகு இப்படத்தில் இணைந்திருக்கிறார்கள்.
தொகுப்பு: சு.அருண் பிரசாத்
“வீட்டிலேயே தயாரிப்பாளர் இருக்கும்போது, வெளிநிறுவனத்துக்குப் படம் இயக்கியது ஏன்?” - கிருத்திகா உதயநிதி விளக்கம்