

“க
டந்த ஆண்டு நான் நடித்து வெளியான சில படங்கள் தவறு செய்திருந்தாலும், இந்த ஆண்டு கண்டிப்பாக வெற்றிகள் கொடுத்தே ஆக வேண்டும் என்பதற்காகக் கடுமையாக உழைத்தேன். அதற்கான பலன் ‘நாச்சியார்’ படத்தின் மூலம் கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்று மன உறுதியுடன் பேசத் தொடங்கினார் இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி.பிரகாஷ்.
திடீரென்று பாலா அழைத்தார். இசையமைப்பாளராகப் பணியாற்ற அழைப்பார் என்ற எண்ணத்துடன் சென்றேன். “இந்தக் கதையில் நீ நடிக்க வேண்டும்” என்றார். அவருடைய இயக்கத்தில் நடிக்கப் பலரும் ஆசைப்படும்போது தானாக வந்த வாய்ப்பை நான் எப்படி மறுக்க முடியும்? சினிமா பள்ளியில் சேர்ந்து படித்துவிட்டு வந்தமாதிரி உணர்கிறேன். அந்த அளவுக்குச் சொல்லிக் கொடுத்தார்.
அப்படி எதுவும் நடைபெறவே இல்லை. குழந்தைகள் பேசத் தொடங்கும்போது, பெற்றோர் ஒவ்வொரு வார்த்தையாகச் சொல்லிக் கொடுத்துப் பேசவைப்பார்கள் இல்லையா, அப்படித்தான் எனக்குச் சொல்லிக்கொடுத்து நடிப்பை வாங்கியிருக்கிறார். அவர் சொல்லிக்கொடுத்ததை அப்படியே நடித்துவிட்டால் போதும். எனது காட்சிகள் அனைத்தையுமே அதிகபட்சம் இரண்டு டேக்குகளுக்குமேல் எடுக்கவில்லை. அவர் இயக்கிய படங்களில் மிகவும் குறைந்த நாட்களில் படமாக்கப்பட்ட படம் இதுவாகத்தான் இருக்கும். எனது நடிப்பில் வெளியான மற்ற படங்களோடு ஒப்பிடும்போது, இது வேறுமாதிரியான படம். புதிய ஜி.வி.பிரகாஷைப் பார்ப்பீர்கள்.
பல படங்களில் அவருடைய நடிப்பைப் பார்த்து வியந்திருக்கிறேன். படப்பிடிப்புத் தளத்தில் அவரோடு நடிக்கும் ஒரு துணை நடிகர் நன்றாக நடித்துவிட்டால்கூட, உடனே பாராட்டிவிடுவார். அந்தக் குணம் நிறையவே பிடிக்கும். இதுவரை பல படங்களில் அவரது நடிப்பைப் பார்த்திருப்போம். ஆனால், இதில் ஜோதிகா மிரட்டியிருக்கிறார். அதுதான் பாலாவுடைய மேஜிக்.
இல்லை. வெவ்வேறு கதாபாத்திரத்தில்தானே நடிக்கிறேன். ஒரு இசையமைப்பாளராக ஒரே நாளில் காலையில் ஒரு படத்துக்கும் மதியம் ஒரு படத்துக்கும் பாடல்களை உருவாக்கியுள்ளேன். அந்த அனுபவம்தான் நடிப்பிலும் எனக்குக் கைகொடுக்கிறது. அங்கே பாடலின் சூழ்நிலை, இங்கே கதாபாத்திரத்தின் சூழ்நிலை. அவ்வளவுதான்.
அனைத்தையுமே கதைதான் தீர்மானிக்கிறது. ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக்கொள்வேன். புதிய இயக்குநர்கள் எனும்போது, கதை எப்படியிருக்கிறது, இவரால் இக்கதையைக் கையாள முடியுமா என்றெல்லாம் யோசித்து முடிவெடுப்பேன். முன்னணி இயக்குநர்கள் எனும்போது, கதை நன்றாக இருந்தால் எவ்வித யோசனையுமின்றி ஒப்புக்கொள்வேன். இந்த ஆண்டு முன்னணி இயக்குநர்கள், புதிய இயக்குநர்கள் என ‘நாச்சியார்’, ‘சர்வம் தாளமயம்’, ‘செம’, ‘குப்பத்து ராஜா’, ஐங்கரன், சசி சார் படம் உள்ளிட்டவை வெளியாகவுள்ளன. ஒரே ஆண்டில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் எனும் இரு மேதைகளின் இசையிலும் எனது படங்கள் வெளியாகவிருப்பது அதிர்ஷ்டமான விஷயம். மொத்தத்தில் 2018-ம் ஆண்டு மறக்க முடியாத ஆண்டாக இருக்கப்போகிறது.
அப்படி இல்லை. இப்போதும் நான் நடிக்கும் படங்களுக்கு நீங்களே இசையமைத்து விடுங்களேன் என்று கேட்பவர்களுக்கு இசையமைக்கிறேன். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் சோர்ந்து போய்விடவில்லை. அவன் சோர்ந்துபோகவும் மாட்டான்.
ஒவ்வொரு தேர்தலிலும் தவறாமல் வாக்களிக்கிறேன். ஆகையால் எனக்குக் கருத்துச் சொல்ல உரிமையிருக்கிறது. இசையமைப்பாளர், நடிகர் என்று என்னை வளர்த்துவரும் இந்தச் சமூகத்துக்கு நான் திரும்ப ஏதாவது செய்ய வேண்டும் அல்லவா? அதற்கான ஒரு சிறிய முயற்சியாகவே என் குரலைப் பதிவுசெய்கிறேன்.
யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். சமூகத்தின் பிரதிபலிப்பாக சினிமா இருக்கிறது. தவறு நடந்தால் சினிமாவில் மட்டும் தட்டிக்கேட்கக் கூடாது. சமூகத்தில் தவறாக நடக்கும் விஷயங்களை ஒரு கலைஞனாக வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கக் கூடாது. ஒரு விஷயம் நடைபெற்றால், அதில் கருத்துச்சொல்ல நினைப்பவர்கள் உடனுக்குடன் தங்களுடைய எதிர்வினைகளைத் தெரிவித்தால் மகிழ்வேன். நான் அப்படித்தான் சொல்ல விரும்புகிறேன்.