Published : 12 Jan 2024 06:09 AM
Last Updated : 12 Jan 2024 06:09 AM

கவனம் ஈர்க்கும் திரை நூல்கள் 2024

திரைக்கதை எழுத்து: கவனம் பெற்ற அல்லது கவனத்துக்கு வராத நாவல், சிறுகதை ஆகியவற்றிலிருந்து தனக்கான திரைக்கதைகளை எழுதும் செயல்முறையைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார் இயக்குநர் வெற்றிமாறன். அவரது உருவாக்கத்தில் வெளிவந்த ‘வடசென்னை’, ‘விடுதலை’ போன்ற அன்மைக்காலப் படங்களின் திரைக்கதைகளைத் தமிழ் ஸ்டுடியோவின் பேசா மொழிப் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. திரைக்கதையை கற்க விரும்புகிறவர்கள், எழுத்து வடிவில் வாசிக்க விரும்பு கிறவர்கள் ஆகியோருக்குப் பயனுள்ள பதிப்பு.

வடசென்னை - திரைக்கதை
வெற்றிமாறன்

விலை ரூபாய்: 600/-
பேசாமொழி பதிப்பகம்
தொடர்புக்கு:9940369806

திரை அரசியல்: சினிமா, இலக்கியம், அரசியல் ஆகிய துறைகள் குறித்துக் கவனிக்கத்தக்க விமர்சனக் கட்டுரைகளை எழுதி வருபவர் ஸ்டாலின் ராஜாங்கம். அவரது புதிய விமர்சனக் கட்டுரை நூலான இதில், பொதுச் சமூகம் ஏற்றுக்கொள்ளாது என்கிற காரணத்துக்காகத் தமிழ் சினிமா பேசியிருக்க வேண்டிய விடுபடல்களை அதற்கான காரணங்களுடன் கவனப்படுத்தியிருக்கிறார். சமூக அரசியலும் அதன் பிரதிபலிப்பாக விளங்கும் திரை வெளியின் அரசியலையும் வரலாற்றுப் பார்வையுடன் முன் வைத்திருக் கிறார்.

நிஜம் நிழல் சமூகம்
ஸ்டாலின் ராஜாங்கம்

விலை ரூபாய்: 320
நீலம் பதிப்பகம்
தொடர்புக்கு: 94454 40405

அனுபவப் பகிர்வு: தொடர்ந்து வணிக வெற்றியைச் சந்தித்து வரும் பொழுதுபோக்குத் திரைப்படங் களைக் கொடுத்து வருபவர் லோகேஷ் கனகராஜ். அவருடன் திரைப்பட ஆர்வலர்களும் ஊடக மாணவர்களும் 5 மணி நேரம் கலந்துரையாடியபோது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களை அம்சவள்ளி - தினேஷ் இருவரும் விரிவாகத் தொகுத்திருக்கிறார்கள். ஒரு வணிக சினிமா உருவாக்குவதற்கான அடிப்படையான திட்டமிடல்கள் தொடங்கி, தனது திரைப்படங்களை உருவாக்கும் தனது அணுகுமுறையை லோகேஷ் கனகராஜ் அனுபவப் பகிர்வாகத் தந்திருக்கிறார்கள்.

லோகேஷ் கனகராஜ் - வாழ்க்கை - சினிமா உலகம் | தொகுப்பு: அம்சவள்ளி - தினேஷ் | விலை: 480| பேசாமொழி பதிப்பகம் | தொடர்புக்கு:9940369806

வெற்றிக்கான குறிப்புகள்: கன்னட - தமிழ்த் திரைப்படங்களில் யதார்த்த நடிப்புக்காகப் புகழ்பெற்றவர் ரமேஷ் அரவிந்த். அவர் தனது திரையுலக அனுபவங்களைத் தொட்டுக்கொண்டு, திரை என்றில்லாது எந்தத் துறையானாலும் எவ்வாறு வெற்றியை எட்டிப் பிடிப்பது என்பதற்கான குறிப்புகளையும் விதிகளையும் விளக்கியிருக்கிறார். கன்னடத்தில் ரமேஷ் அரவிந்த் எழுதிய இந்நூலைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் கே.நல்லதம்பி. தமிழச்சி தங்கபாண்டியன், சுஹாசினி, சுகா ஆகியோரின் முன்னு ரையும் இடம்பெற்றுள்ளன.

அன்புடன் ரமேஷ்
ரமேஷ் அரவிந்த்

விலை ரூபாய்: 250
சாவண்ணா பதிப்பகம்
தொடர்புக்கு: 90363 12786

31 நல்ல சினிமாக்கள்: ஆங்கிலம், இத்தாலி, ஜப்பானியம் என பல அந்நிய மொழிகளிலும் தமிழ், மலையாளம், இந்தி ஆகிய இந்திய மொழிகளிலும் வெளியான 31 சிறந்த திரைப்படங்களைக் குறித்த தனது அட்டகாசமான, ஆழமான பார்வையைச் சுவைபடப் பரிமாறியிருக்கிறார் டாக்டர் ஆர்.கார்த்திகேயன் இந்நூலில் எழுத்தாளர் அலசியிருக்கும் திரைக் கதாபாத்திரங்களின் மனப்பாங்கு, மனப்போக்கு ஆகியவற்றைக் குறித்து நாம் தவறவிடும் கோணங்களை முன்வைக்கிறார். அது திரை விமர்சனத்துக்குப் புதிய பரிமாணத்தைத் தருகிறது.

திரைப்பாடம்
டாக்டர் ஆர்.கார்த்திகேயன்

தமிழ்திசை பதிப்பகம்
விலை ரூபாய்: 160
நூலைப் பெற: 7401296562/ 7401329402

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x