ரஜினிகாந்தின் திரைப் பயணம்!

ரஜினிகாந்தின் திரைப் பயணம்!
Updated on
1 min read

சூப்பர் ஸ்டார் - சூப்பர் மனிதர் என ரஜினிகாந்தின் 45 வருடத் திரைப் பயணம், பொது வாழ்க்கை இரண்டையும் விரிவாகத் தமிழில் பதிவு செய்திருக்கும் ஒரே வண்ணப் புத்தகம், தமிழ் திசை வெளியீடாக வெளிவந்திருக்கும் ‘சூப்பர் ஸ்டார் 45’ சிறப்பு மலர்.

74ஆம் வயதில் நடைபோடும் ரஜினிகாந்த் எனும் செயல் புயலின் கலைப் பயணத்தில் பிரமிக்க வைக்கும் செய்திகள், அவருடன் கலை வாழ்வைப் பகிர்ந்துகொண்ட பிரபலங்களின் சாட்சியங்கள், பொது வாழ்வில் உடன் நின்ற ஆளுமைகளின் பார்வைகள், ஆன்மிகப் பாதையில் எங்கும் இடை நிற்காத நதி போன்ற அவரது ஓட்டத்தின் அதி முக்கியமான தருணங்கள், ஒவ்வொரு பதிவிலும் இதுவரை பார்த்திருக்க முடியாத பிரத்யேகப் ஒளிப்படத் தொகுப்புகள், ஏ.பி.ஸ்ரீதரின் தூரிகையில் முகிழ்த்த ரஜினியின் பல்வேறு தோற்றங்களைப் புதிய கோணத்தில் வடித்த ஓவியங்கள் என.. புரட்டப் புரட்ட ரஜினியின் வாழ்க்கை ஓர் அரிய திரட்டாக உங்கள் கண்களைக் கவரும். ரஜினியை ஆழமாக அறிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் ரசித்துப் பாதுகாக்க... தம் அன்புக்கு உரிய எவருக்கும் பரிசாக அளித்து மகிழச் சிறந்த தெரிவு.

47வது சென்னைப் புத்தகக் காட்சியில் 56, 57, 540, 541 ஆகிய அரங்குகளில் தள்ளுபடி விலையில் பெற்றுக்கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in