

ம
லையாள சினிமாவின் தந்தை என அழைக்கப்படும் ஜே.சி.டானியல் வாழ்க்கை குறித்த ‘செல்லுலாய்டு’ படம் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து மலையாள எழுத்தாளர் மாதவிக்குட்டியின் படத்தை ஆமி என்ற பெயரில் எடுத்து முடித்திருக்கிறார் மலையாள இயக்குநர் கமல். ஆமி, மாதவிக்குட்டியின் செல்லப் பெயர். மாதவிக்குட்டியாக மலையாள முன்னணி நடிகை மஞ்சு வாரியர் நடித்திருக்கிறார். பொதுவாக நாயகன் ஒருவர் நடிக்க இரண்டு மூன்று நாயகன் நடிப்பதுதான் வழக்கம்.
ஆனால் இந்தப் படத்தில் டோவினோ தோமஸ், அனூப் மேனன், முரளி கோபி, ராகுல் மாத்யூ என நான்குபேர் நாயகர்களாக நடித்துள்ளனர். மாதவிக்குட்டியின் சர்ச்சைக்குரிய ‘எண்ட கத’ நூலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளிவந்து கவனம் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் மாதவிக்குட்டியாக நடிக்க முதலில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.