

எ
ஸ்.எஸ். இன்டர்நேஷ னல் லைவ் சார்பில் கடந்த ஐன. 15 முதல் 19 வரை சென்னை மியூசிக் அகாடமியில் ‘தெய்வத்துள் தெய்வம்’ என்ற பெயரில் ‘காஞ்சி மஹாபெரி யவர்’ வாழ்க்கை வரலாறு நாடகம் நடந்தது.
4 பருவங்களில் பெரியவரின் வாழ்க்கை, காட்சியாக்கப்பட்ட இந்த நாடகத்தை, நடிகர் ரஜினிகாந்த் உட்பட பல பிரபலங்கள் கண்டு ரசித்துள்ளனர்.
நாடகம் குறித்தும், நாடகத்தை ஒரு பார்வையாளராக இருந்து ரஜினிகாந்த் ரசித்தது குறித்தும், நாடகத்தை எழுதி, இயக்கிய இளங்கோ குமணன் கூறியதாவது:
மஹா பெரியவர் உலகுக்கு சொல்லிய பக்தி, எளிமை, நேர்மை, மதஒற்றுமை, பிற மதங்களை மதிப்பது, தமிழ்ப் பற்று, ஆன்மிக அரசியல், ஓட்டுக்கு பணம் கொடுப்பது என பல செய்திகளை இந்த நாடகம் பதிவு செய்துள்ளது.
இந்த நாடகத்தில் நடித்த அனைவருக்கும் பாராட்டு கள் கிடைத்தன.
குறிப்பாக, நீதிபதி இஸ்மாயில், எம்.எஸ்.சுப்புலஷ்மி, பத்மா சுப்ரமண்யம், ரா.கணபதி என அனைத்து பாத்திரங்களும் கனக்கச்சிதம்!
2014-ல் நாங்கள் நடத்திய ‘பொன்னியின் செல்வன்’ நாடகத்தை ரஜினிகாந்த் காண வந்தபோது ‘மீண்டும் எப்போதாவது நல்ல நாட கம் போட்டால், நல்ல நாட கம் என்று நாங்கள் நம்பி னால் உங்களை அழைப்போம். நீங்கள் வரவேண்டும்?’ என்று சொன்னோம். ‘கண்டிப்பா... கண்டிப்பா வர்றேன்' என்று அப்போது உறுதியாகச் சொன்னார். இப்போது 4 ஆண்டுகளுக் குப் பிறகு ‘தெய்வத்துள் தெய்வம்’ நாடகத்தைப் பார்க்க வர வேண்டும் என அழைத்தோம். வந்தார். பார்த்து மகிழ்ந்தார்.
ரஜினிகாந்த் ஓர் அப்பழுக்கற்ற ஆன்மிகவாதி என்பதை நேரில் கண்டோம். நெகிழ்ச்சியோடு நாடகத்தை ரசித்தார். இவரைப் போல பல்துறை வித்தகர் களும், காஞ்சி பெரியவரின் பக்தர்களும் இந்நாடகத்தை நாடகமாக இல்லாமல் பெரியவரின் வாழ்க்கையையே நேரில் பார்த்த உணர்வை பெற்றனர் என்றார்.