

திரைப்பட விநியோகத்தில் நேரடியாக ஈடுபட்டு, சொந்த அனுபவம், களத் தகவல் சேகரிப்பு ஆகியவற்றின் மூலம் கேபிள் சங்கர் எழுதிய ’சினிமா வியாபாரம்’ என்கிற நூல் இன்றைக்கும் சிறந்த வழிகாட்டியாக இருக்கிறது. தற்போது ஓடிடி குறித்து இவர் எழுதியுள்ள புதிய நூல் முதலீட்டுக்கான லாபத்தைத் திரையரங்குக்கு வெளியே மீட்டெடுக்கும் திறவுகோல் என்றே சொல்லலாம்.
ஓடிடி என்றால் என்ன என்று பெரும் பாலானவர்களுக்குத் தெரியாது. ஆனாலும் தினம் தினம் இந்த வார்த்தையைப் பயன்படுத்தாதவர்கள் மிகக் குறைவு. இன்று திரையரங்கை நம் உள்ளங்கைக்குள் கொண்டு வந்து விட்டது ஓடிடி. இனி இதுதான் திரையுலகின் எதிர்காலம் என்று உறுதியாகச் சொல்லும் அளவுக்கு ஓடிடி ஆட்சி செய்யத் தொடங்கிவிட்டது
ஓடிடி என்றால் என்ன, அது எப்படித் தொடங்கப்பட்டது, உலக அளவில் அதன் இடம் என்ன, இந்தியாவில் ஓடிடி நிகழ்த்திக்கொண்டிருக்கும் மாற்றங்கள் என்ன, தமிழில் ஓடிடி இன்று எந்த நிலையில் உள்ளது, இதன் எதிர்காலம் எப்படிப்பட்டதாக இருக்கும், வாடிக்கையாளர்கள் ஓடிடி தளங்களை எப்படிப் பார்க்கிறார்கள், அங்குள்ள படைப்புகளை எப்படி அணுகுகிறார்கள், ஓடிடியில் தற்போதைக்கு பின்பற்றப்படும் படைப்புச் சுதந்திரம் எப்படிப்பட்டது, ஓடிடியில் உங்கள் திரைப்படமோ வெப்சீரிஸோ வரவேண்டும் என்றால் ஓர் இயக்குநராக, ஓர் எழுத்தாளராக, அல்லது ஒரு தயாரிப்பாளராக நீங்கள் செய்ய வேண்டியது என்ன, ஓடிடி தளங்களை ஒரு படைப்பாளியாக அணுகுவது எப்படி, அதன் வணிகச் சாத்தியங்கள் யாவை என ஓடிடியின் அடிப்படை தொடங்கி அதன் இயங்கியல் வரை அனைத்தையும் சுவாரஸ்யமாக விளக்கியிருக்கிறார் கேபிள் சங்கர்
ஒரு வாடிக்கையாளராக ஓடிடி பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளவும் ஒரு படைப்பாளியாக ஓடிடி தளத்தில் காலடி எடுத்துவைக்கவும் இந்த நூல் உங்களுக்குக் குழப்பமில்லாமல் வழிகாட்டும் என்பதில் ஐயமில்லை.
OTT வியாபாரம்
கேபிள் சங்கர்
சுவாசம் பதிப்பகம்,
சென்னை 127
தொடர்புக்கு: 8148066645