ரசிகர்களுக்கு ‘இன்டர்ஸ்டேல்லர்’ டீஸர் காட்டிய நோலன்

ரசிகர்களுக்கு ‘இன்டர்ஸ்டேல்லர்’ டீஸர் காட்டிய நோலன்
Updated on
1 min read

கலிஃபோர்னியாவின் சான் டியாகோவில் ஆண்டுதோறும் நடைபெறும் ‘காமிக்-கான்’ நிகழ்ச்சியில் பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனும், பிரபல நடிகர் மாத்யூ மெக்கானஹேயும் கலந்துக்கொண்டனர்.

அவர்கள் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சிக்கொடுக்கும் விதமாக, இந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகவுள்ள தனது ‘இன்டர்ஸ்டேல்லர்’ திரைப்படத்தின் டீஸரை திரையிட்டனர். எனினும், ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கப்படும் இத்திரைப்படத்தைப் பற்றின தகவல்களை, இருவருமே மர்மமாக வைத்துள்ளனர்.

“என்னிடம் இப்படத்தை பற்றி சொல்வதற்கு நிறைய இருக்கின்றன. ஆனால், நான் எதையும் கூறப்போவதில்லை”, என்று மாத்யூ மெக்கானஹே கூறினார். முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இவர், பைலட் வேடத்தில் நடிக்கிறார்.

மேலும், இவர் இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவாகவும், தனது பைலட் பணியை விடுத்து, நீண்ட காலத்திற்கு பின் நட்சத்திரங்களுக்கு செல்ல வாய்ப்பு அளிக்கப்படுவதாகவும் இத்திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் சித்திரக்கப்பட்டுள்ளது.

‘லட்சியப் படம்’

“நோலன் இயக்கியதிலேயே, அவரது லட்சியப் படமாக அவர் கருதுவது இப்படத்தைதான்”, என்று மெக்கானஹே தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் முதல்முறையாக கலந்துக்கொண்டிருக்கும் நோலன் பேசுகையில், “இது ஒரு வியக்கத்தக்க நிகழ்ச்சி. உலகில் வேறு எந்த இடத்திலும் இவ்வளவு அற்புதமான நிகழ்ச்சி நடப்பதாக எனக்கு தெரியவில்லை”, என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in