திரை நூலகம்: திரைப்படங்களில் அரசியல்

திரை நூலகம்: திரைப்படங்களில் அரசியல்
Updated on
1 min read

மார்க்சியர், கல்வியாளர், இலக்கியவாதி, சமூக ஆய்வாளர், தத்துவவாதி என பல தளங்களில் இயங்கி வருபவர் பேராசிரியர் அருணன். அவரது எழுத்துகளும் காணொளி உரைகளும் தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருபவை. கடந்த 10 ஆண்டுகளில் அவர் எழுதி, பல்வேறு இடதுசாரி, முற்போக்கு இதழ்களில் வெளியான 33 கட்டுரைகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

அவற்றில் 25 கட்டுரை கள், கடந்த 100 ஆண்டுகளில் வெளியான திரைப்படங்களில், சமூக அரசியல் வரலாறு எவ்வாறு கையாளப்பட்டுள்ளது என்பதை, தேர்ந்து கொண்டுள்ள திரைப்படங்கள் வெளியான கால வரிசையில் ஆசிரியர் அலசியிருக்கிறார்.

காவியக் கால சினிமா யுகத்தின் படைப்புகளில் ‘மகாகவி காளிதாஸ்’, ‘நந்தனார்’, ‘ஔவையார்’, ‘ராணி சம்யுக்தா’, ‘பட்டினத்தார்’, ‘அருணகிரி நாதர்’ ‘மதுரை வீரன்’ ‘கப்பலோட்டிய தமிழன்’ வரை ஆசிரியர் தேர்ந்தெடுத்து அலசியுள்ள படங்களின் காட்சிகள், இக்கட்டுரைகளின் வாசிப்புக்குப் பிறகு புதுவிதத் தரிசனத்தைத் தரலாம். வண்ணப்பட யுகத்தில் தேர்ந்துகொண்டுள்ள படங்களில், ஞான ராஜசேகரன் இயக்கிய ‘பாரதி’, மணி ரத்னம் இயக்கிய ‘இருவர்’, தொடங்கி தா.செ.ஞானவேல் இயக்கிய ‘ஜெய்பீம்’ வரையிலும் இந்த ஆய்வை விரித்துள்ளார்.

‘கலையும் இலக்கியமும் மக்களுக்கே’ என்கிற மார்க்சிய அழகியல் கோட்டுப்பாட்டின் அடிப்படையில் திரைப் படைப்பாளிகளின் அணுகுமுறைகள் மீதான விமர்சனம் வாசகர்களுக்கு மட்டு மின்றி, திரைத்துறையில் இயங்க நினைக்கும் புதிய வர்களுக்கும் ஊக்கம் அளிக்கக் கூடியது.

தமிழ் சினிமாவில் வரலாற்று நாயகர்கள்

அருணன்

வசந்தம் வெளியீட்டகம்,

சிம்மக்கல், மதுரை - 1

தொடர்புக்கு: 93848 13030

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in