

2012
-ல் வெளியாகி பெரும் வெற்றியை ஈட்டிய இந்திப் படம் ‘இஷக்ஸாதே’. அதில் நடித்த பிரபல ஜோடியான பரிணீத்தி சோப்ராவும் அர்ஜுன் கபூரும் மீண்டும் ‘சந்தீப் அவுர் பிங்கி ஃபரார்’ என்ற படத்துக்காக இணைந்திருக்கின்றனர். இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர்களைச் சமீபத்தில் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் பரிணீத்தி. ‘இஷக்ஸாதே’ திரைப்படத்தைப் போலவே இதுவும் தீவிரமானதொரு திரைப்படமாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறது படக்குழு. இதில் அர்ஜுன் கபூர் காவல்துறை அதிகாரியாகவும் பரிணீத்தி பெருநிறுவனத்தில் பணிபரியும் பெண்ணாகவும் நடித்திருக்கின்றனர். திவாகர் பேனர்ஜி இயக்கவிருக்கும் இந்தப் படம், ஹரியாணாவைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி சந்தீப்புக்கும், ஒரு பெருநிறுவனத்தில் பணிபரியும் பெண் பிங்கிக்கும் இடையில் நடக்கும் திகில் கதையாக படமாக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு, ஆகஸ்ட் 3 அன்று இந்தப் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘திதளி’ படத்துக்குப் பிறகு, திவாகர் இயக்கும் படம் இது என்பதால் பாலிவுட்டில் ‘சந்தீப் அவுர் பிங்கி ஃபரார்’க்கு எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.
- கனி