மனம்தான் என் கால்ஷீட் மேனேஜர்! - நிக்கி கல்ராணி பேட்டி

மனம்தான் என் கால்ஷீட் மேனேஜர்! - நிக்கி கல்ராணி பேட்டி
Updated on
1 min read

“இ

ந்த வருஷ கடைசிக்குள்ள நான் நடிச்சு முடிச்ச ஆறு படங்கள் வெளியாகும்னு நினைக்கிறேன். தமிழ்ல கொஞ்சப் படங்கள் நடிச்சிருந்தாலும் ரசிகர்களுக்குப் பிடிச்சமாதிரி நடிச்சிருக்கேன்னு நினைக்கிறேன்” என்று சிரித்துக்கொண்டே பேசத் தொடங்கினார் நிக்கி கல்ரானி.

மல்டி ஸ்டாரர் படங்களில் நடித்தாலும், எனது கதாபாத்திரத்துக்கு என்ன முக்கியத்துவம் என்று பார்த்தே நடித்தேன். நீங்கள் கவனித்துப் பார்த்தால் தெரிந்திருக்கும், வெறும் கிளாமருக்காக மட்டும் நான் நடித்திருக்க மாட்டேன்.

உண்மைதான். அடல்ட் காமெடி அதிகமுள்ள படங்களைக் கதாநாயகிகள் விரும்புவதில்லை. ஆனால், தற்போது வெளியாகியிருக்கும் ‘ஹர ஹர மஹாதேவகி’ படத்தில் கல்லூரிப் பெண்ணாக நடித்திருக்கிறேன்.

தமிழ் தெரியாததால் நிறைய வசனங்கள் புரியவில்லை. ஆனால், நான் பேசியுள்ள வசனங்களின் அர்த்தத்தைத் தெரிந்துகொண்ட பிறகே நடித்தேன். பெண்களைத் தவறாகச் சித்தரிப்பது, ஆபாசமாகப் பேசுவது போன்றவை படத்தில் இல்லை. மொழி எப்போதுமே எனக்கு ஒரு தடையாக இருந்ததில்லை. ‘ஹர ஹர மஹாதேவகி’ ஒரு முயற்சிதான். எனக்கு எப்போதுமே புது முயற்சியில் நடிப்பது பிடிக்கும்.

அவருடைய கருத்து சரியானதுதான். அது இயக்குநர்களின் கையில்தான் இருக்கிறது. சினிமா பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாற வேண்டும் என நினைக்கிறேன். நல்ல வாய்ப்புகள் அமையும்போது அதற்காக அதிகம் உழைக்கும் சக்தி பெண்களிடம் அதிகம் உண்டு.

எனக்கும் சில கதைகள் வந்தன. ஆனால், எனக்கு அந்தக் கதாபாத்திரம் மிகவும் பிடித்து, கண்டிப்பாக இதில் நடிக்க வேண்டும் என்று என் மனதுக்குத் தோன்றியிருக்க வேண்டும். ஆனால், நான் கேட்ட கதைகள் எதுவும் எனக்கு அப்படித் தோன்றச் செய்யவில்லை. மனம்தான் எனது முதல் கால்ஷீட் மேனேஜர். நான் என்ன செய்ய?

‘மரகத நாணயம்’ முழுப் படமுமே சவால்தான். ஆண்குரலில் படம் முழுவதும் கதாநாயகி பேசுவதுபோல் எனக்குத் தெரிந்து எந்தப் படத்திலும் நான் பார்த்ததில்லை. ஒவ்வொரு காட்சியையும் வாய் அசைவுகள் முதல் உடல் அசைவுவரை ஆண் தன்மையுடன் நடிக்க வேண்டும். அது மிகவும் கடினமானது. அதில் எனது கதாபாத்திரத்துக்குப் பாராட்டு கிடைத்தபோது மிகவும் மகிழ்ந்தேன்.

தமிழில் தற்போது பத்துப் படங்களில் மட்டுமே நடித்துள்ளேன். விரைவில் நடிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வெற்றியை நோக்கி நகர வேண்டும். ஒரே முயற்சியில் வெற்றியடைந்துவிட்டு, கீழே விழ வேண்டாம் என்று நினைக்கிறேன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in