ஊக்கமளிக்கும் விக்டரின் பயணம் | அறிவுக்குக் கொஞ்சம்...

ஊக்கமளிக்கும்    விக்டரின் பயணம் | அறிவுக்குக் கொஞ்சம்...
Updated on
2 min read

அமெரிக்க விண்வெளியியல் வரலாற்றில் முக்கியத்துவமிக்க ‘ஆர்டெமிஸ் 2’ பயணம், ஏப்ரல் 2 அன்று தொடங்கியது. நிலவைப் பத்து நாள் சுற்றிவரும் இப்பயணத்தில் பங்கேற்றுள்ள நால்வரில் ஒருவர் விக்டர் க்ளோவர். இவர், நிலவுக்குப் பயணிக்கும் முதலாவது ஆப்ரிக்க அமெரிக்கர் எனும் சிறப்பினைப் பெறுகிறார்.

பொறியியல் பட்டம் பெற்ற பின்னர் கடற்படையில் விமானியாகச் சேர்ந்தவர், விண்வெளி ஆய்வில் இறங்கினார். 2020இல் சர்வதேச விண்வெளி நிலையம் சென்றவர், அங்கு 168 நாள்கள் தங்கியிருந்ததோடு 4 முறை விண்வெளி நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். வருங்காலத்தில் விண்வெளி ஆய்வில் ஈடுபடுபவர்களை ஊக்குவிக்கும்வகையில் தனது பயணம் அமையும் என்பது விக்டரின் எதிர்பார்ப்பு.

அறிவியல் துறைகளில் பெண்களின் சரிவு!

கண்டுபிடிப்பு, பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல், தொழில் நுட்ப முன்னேற்றம் உள்ளிட்டவற்றைப் பொறுத்தவரை அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல், கணிதத் துறைகளின் (STEM) பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.

இவற்றில் அதிகளவு பட்டதாரிப் பெண்மணிகளை உருவாக்குகிற நாடாக இந்தியா விளங்குகிறது. அதேநேரத்தில், அத்துறைகளில் வேலைவாய்ப்பு பெற்று உயர் பதவிகளை எட்டுகிறவர்களின் எண்ணிக்கை சொற்பம் என்கிறது எர்னஸ்ட் அண்ட் யங் நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வறிக்கை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in