மனித குலத்தின் இரண்டாவது தாய்நாடு - தமிழ்நாடு

சி-எம் 130 மரபணுக் குறியீடு வெள்ளி விழா
மனித குலத்தின் இரண்டாவது தாய்நாடு - தமிழ்நாடு
Updated on
4 min read

மனிதப் பரிணாமவியல் ஆராய்ச்சியில் ஒரு திருப்பு முனையாக இருந்த மரபணு சி-எம் 130 ஒய் (C-M 130 Y). மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த விருமாண்டி, அவரைப் போல் சிலரிடம் 2001இல் மேற்கொள்ளப்பட்ட கண்டறிதல் மூலம் தெரியவந்தது. இந்தக் கண்டறிதலை நிகழ்த்தியவர்களில் முக்கியமானவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் ராம.பிச்சப்பன். அந்தக் கண்டறிதல் மேற்கொள்ளப்பட்டு 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. மனித குலப் பரிணாமவியல் வரலாற்றில் நாமும் ஒரு முக்கியக் கண்ணியாக இருந்தது தொடர்பான இந்தக் கண்டறிதல் கொண்டாடப்பட வேண்டும்.

என்ன கண்டறிதல்?- உலகில் இன்றைக்கு வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரே நவீன மனித இனம் Homo sapiens sapiens ஆப்ரிக்காவில் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த இனம் தோன்றியது. தற்போது உலகெங்கும் இது பரவியுள்ளது. ஆனால் இந்த மனித இனம் எப்படி உலகம் முழுக்கப் பரவியது என்பது கேள்விக்குறியாகவே இருந்துவந்தது. மரபணு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட பின்னர், மனிதர்களின் பரவல் குறித்த மரபணு ஆராய்ச்சிகள் தீவிரமடைந்தன. இந்தத் துறை Genographic Studies of Human Evolution எனப்படுகிறது.

1996இல் ஸ்பென்சர் வெல்ஸ் என்பவர் ஒய் (Y) குரோமசோம் மூலம் மத்திய ஆசியாவில் மனித இனப்பரவல் குறித்த ஆய்வுகளைத் தொடங்கினார். அந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பேராசிரியர் ராம.பிச்சப்பன் மூலம் இந்தத் திட்டத்துக்கான ஆய்வு நடத்தப்பட்டது. அதில் பிறமலைக்கள்ளர், யாதவர், செளராஷ்டிர சமூகத்தினரின் ரத்த மாதிரிகள் பெறப்பட்டு ஒய் குரோமசோம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in