மிகப்பெரிய கருந்துளை

மிகப்பெரிய கருந்துளை
Updated on
2 min read

இதுவரை கண்டிராத மிகப்பெரிய கருந்துளை சமீபத்தில் கண்டறியப்பட்டிருக்கிறது. இரண்டு அதி நவீன எக்ஸ் கதிர் விண்வெளித் தொலைநோக்கிகள் இதை உறுதிசெய்துள்ளன. பூமியிலிருந்து சுமார் 13 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இந்த மிகப்பெரிய கருந்துளை சக்தி வாய்ந்த காற்றுடன் விநாடிக்கு 37,282 மைல் வேகத்தில் விண்வெளியில் பொருள்களை வீசுகிறது.

இந்தக் குறிப்பிட்ட மிகப்பெரிய கருந்துளை சுழல் விண்மீன் மண்டலம் NGC 3783க்குள் பதுங்கி இருந்தது. இது சென்டாரஸ் நட்சத்திரக் கூட்டத்தில் இருக்கிறது. தொடக்கத்தில் வானியலாளர்கள் இந்தக் கருந்துளையிலிருந்து ஒரு பிரகாசமான எக்ஸ் கதிர் விரிவடைவதைக் கண்டனர். பின்னர் அது விரைவாக மறைந்துவிட்டது.

இதிலிருந்து வேகமான காற்று விநாடிக்கு 60 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் வீசியது. இந்தக் காற்று மட்டுப்பட்டவுடன், அது மீண்டும் வெளிப்பட்டது. இந்த ஒளியின் வேகத்தில் ஐந்தில் ஒரு பங்கு வேகத்தில் காற்று வீசியது. ஒரு கருந்துளை இவ்வளவு வேகமாகக் காற்றை உருவாக்குவதை நாங்கள் இதற்கு முன் பார்த்ததில்லை என்று நெதர்லாந்தின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (SRON) ஆராய்ச்சியாளர் லீயிகு தெரிவித்திருக்கிறார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in