பெ.நா.அப்புசுவாமி பிறந்த 135ஆம் ஆண்டு தொடக்கம் | அறிவியல் தமிழ் ‘பெ.நா.’

பெ.நா.அப்புசுவாமி பிறந்த 135ஆம் ஆண்டு தொடக்கம் | அறிவியல் தமிழ் ‘பெ.நா.’
Updated on
3 min read

தமிழில் அறிவியல் எழுத்து பற்றிப் பேசும் போது, பலரும் குறிப்பிடும் முதல் பெயர் பெ.நா.அப்புசுவாமி. அறிவியல் தமிழ் குறித்த ஆர்வம் அதிகரித்தபோது, இவரைப் பற்றித் தேடினேன். தமிழில் ஆவணப்படுத்தும் முயற்சிகள் குறைவு. அதிலும் எழுத்து, நூல்கள், எழுத்தாளர்கள் குறித்த ஆவணப்படுத்தும் முயற்சிகள் பெரிதாக இல்லை.

குறிப்பிட்ட துறை சார்ந்த நூல்களை ஆவணப்படுத்தும் நூலகம், எழுத்தாளர்களின் படைப்புகளை ஆராயும் கல்வி-ஆராய்ச்சி நிறுவனங்கள், பொதுத்தளங்களில் எழுத்தாளர் குறித்த தகவல்கள் பரவலாகக் கிடைப்பதில்லை. ஆங்காங்கே முன்னெடுக்கப்படும் தன்னார்வ முயற்சிகள், அரசு நிறுவனங்களில் எப்பொழுதாவது நிகழும் அதிசயங்களால் சில மாற்றங்கள் நிகழ்கின்றன.

அந்த வகையில் அறிவியல் எழுத்தாளர் பெ.நா.அப்புசுவாமியின் நிலைமை சற்றுப் பரவாயில்லை. ‘அறிவியல் தமிழ் அறிஞர் பெ.நா.அப்புசுவாமி’ - தொகுப்பு: சா.கிருட்டிணமூர்த்தி, மு.வளர்மதி, ஆ.தசரதன்; ‘பெ.நா.அப்புசுவாமியின் அறிவியல் கட்டுரைகள்’ - 3 தொகுதிகள், தொகுப்பு: மு.வளர்மதி. இந்த நூல்கள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடுகள்.

அறிவியல் ஆர்வம்: தமிழில் பரவலாக எழுதிய முதல் அறிவியல் எழுத்தாளர் பெ.நா.அப்புசுவாமி. பெருங்குளம் நாராயணன் எனும் மருத்துவரின் முதல் மகனாக சென்னையில் இவர் பிறந்தார் (31.12.1891). மயிலாப்பூர் சித்திரக்குளம் சதுக்கத்தில் இவருடைய வீடு இருந்துள்ளது. தந்தையைப் போலவே மருத்துவம் படிக்க வேண்டும் என்கிற ஆசையுடன் இருந்திருக்கிறார்.

பெ.நா.அப்புசுவாமிக்கு அறிவியல் கற்றுத் தந்தவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இயற்பியல் கற்பித்தவர் ஜோன்ஸ். நோபல் பரிசு பெற்ற சி.வி.ராமனுக்குக் கற்பித்தவர் இவர்.

ஆனால், தன் தந்தையின் வற்புறுத்தலுக்கு ஏற்பச் சட்டம் படித்து, பின்னர் வழக்குரைஞர் ஆனார் அப்புசுவாமி. சட்டப் படிப்பு படிக்கப் போகும் தகவலைத் தன் பள்ளி ஆசிரியர்களிடம் சொல்ல பெ.நா.அப்புசுவாமி சென்றுள்ளார்.

அப்போது வேதியியல் ஆசிரியரான எர்லம்ஸ்மித் இதைக் கேட்டு, இதற்காகவா என்னுடைய வேதியியல் பரிசோதனைக்கூடப் பொருள்களை வீணாக்கினாய் என்று கடிந்துகொண்டிருக்கிறார். அப்போது மிகவும் வேதனைப்பட்டு, உங்களிடம் கற்றதை வீணாக்காமல் பயன்படுத்துவேன் எனச் சொல்லியிருக்கிறார் அப்புசுவாமி.

முதல் முயற்சி: பெ.நா.அப்புசுவாமியின் சித்தப்பா அ.மாதவையா. தமிழின் முதல் நாவல்களில் ஒன்றான ‘பத்மாவதி சரித்திர’த்தை எழுதியவர். தமிழின் முதல் அறிவியல் இதழாகக் கருதப்படும் ‘தமிழர் நேச’னுக்கு இவரே முதல் ஆசிரியர். இந்த இதழுக்கு அறிவியல் கட்டுரை எழுதுமாறு அப்புசுவாமியிடம் மாதவையா கேட்டுக்கொண்டிருக்கிறார். பள்ளிப் படிப்பில் முறைப்படி தமிழ் கற்காததால் அப்புசுவாமி தயங்கியிருக்கிறார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in