

எனக்கு 65 வயது ஆகிறது. நீண்ட நாட்களாக பாஸ்போர்ட் வைத்திருந்தேன். இப்போது அது காலாவதியாகி விட்டது. அந்த காலத்தில் 8ஆம் வகுப்பு வரை படித்தேன். எனினும் என்னிடம் கல்விச் சான்றிதழ் எதுவும் இல்லை. காலாவதி ஆன பாஸ்போர்ட்டில் உள்ள பிறந்த தேதிக்கும், ஆதார் அட்டையில் உள்ள பிறந்த தேதிக்கும் இடையே இரண்டு நாட்கள் வித்தியாசம் உள்ளது. ஆதார் திருத்தத்துக்கு அவர்கள் கேட்கும் கல்விச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றை என்னால் சமர்ப்பிக்க இயலவில்லை. இதனால், ஆதார் அட்டையிலும் என்னால் பிறந்த தேதியை திருத்தம் செய்ய இயலவில்லை. அதேபோல், பிறந்த தேதியை உறுதி செய்யும் சான்றிதழை சமர்ப்பிக்க முடியாததால், காலாவதியான பாஸ்போர்ட்டையும் புதுப்பிக்க முடியவில்லை. இந்த நிலைமையில், என்னுடைய பாஸ்போர்ட்டை புதுப்பிக்க சட்டபூர்வமாக ஏதேனும் வாய்ப்பு உள்ளதா? - மல்லிகா, மன்னார்குடி
உங்கள் ஆதார் அட்டையில் உள்ள பிறந்த தேதிக்கும், காலாவதியான பாஸ்போர்ட்டில் உள்ள பிறந்த தேதிக்கும் இடையே இரண்டு நாட்கள் வித்தியாசம் உள்ளதாக கூறியுள்ளீர்கள். தாங்கள் 8-ஆம் வகுப்பு வரை படித்ததாகவும், பள்ளி சான்றிதழ் இல்லை என்றும், பிறப்பு சான்றிதழ் இல்லை என்றும், ஆதார் அட்டையில் பிறப்பு தேதி மாற்றம் செய்ய முடியவில்லை என்றும் அதனால், பாஸ்போர்ட்டை புதுப்பிக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளீர்கள்.