காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல்கள்

காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல்கள்
Updated on
2 min read

சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டி, பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அரணாக விளங்க வேண்டிய காவல் நிலையங்கள், சில நேரங்களில் மனித உரிமை மீறல்களின் மையமாக மாறுவது ஒரு ஜனநாயக சமூகத்தின் ஆகப்பெரிய அவலமாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21வது பிரிவு ஒவ்வொரு குடிமகனுக்கும் வாழ்வதற்கும் தனிநபர் சுதந்திரத்திற்குமான மறுக்க முடியாத உரிமையை வழங்கியுள்ளது.

நீதிமன்றத்தால் குற்றம் நிரூபிக்கப்படும் வரை எவரும் குற்றவாளி அல்ல என்ற நீதியின் அடிப்படைத் தத்துவத்தை மீறி, விசாரணை என்ற பெயரில் காவல் நிலையங்களிலேயே கைதிகளை உடல் மற்றும் மன ரீதியாகத் துன்புறுத்துவது சட்டத்திற்கும் மனித நேயத்திற்கும் முழுமையாக எதிரானது.

இத்தகைய அத்துமீறல்களைத் தடுத்து மனித உரிமைகளைக் காக்க, சிவில் நீதிமன்றத்துக்கு இணையான தன்னாட்சி அதிகாரம் கொண்ட தேசிய மற்றும் மாநில மனித உரிமைகள் ஆணையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் எந்தவொரு காவல் மரணம் நிகழ்ந்தாலும், அது நடந்த இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என்பது காவல் துறை நிர்வாகத்துக்கு விதிக்கப்பட்ட கட்டாய விதியாகும்.

பாதிக்கப்பட்ட நபரோ, அவரது குடும்பத்தினரோ அல்லது சமூக அக்கறை கொண்ட அமைப்புகளோ ஒரு வெள்ளைத் தாளில் புகாரை எழுதி தபால் மூலமாகவோ அல்லது இணையதளம் வழியாகவோ ஆணையத்துக்கு மிக எளிதாக அனுப்ப முடியும். இந்த எளிய நடைமுறைக்குக் கட்டணமோ அல்லது வழக்கறிஞரின் கட்டாய உதவியோ தேவையில்லை.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in