இணையவழி மோசடி எனும் சிலந்தி வலை! - தப்பிப்பது எப்படி?

இணையவழி மோசடி எனும் சிலந்தி வலை! - தப்பிப்பது எப்படி?
Updated on
2 min read

மக்களுக்கு நலம் தரும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் 'சைபர்' குற்றங்கள் மின்னல் வேகத்தில் வளர்ந்து வருகின்றன. மக்களின் பேராசை, தேவையற்ற பயம் மற்றும் போதிய விழிப்புணர்வு இல்லாமை ஆகிய மூன்றையும் மூலதனமாக வைத்து இந்த மோசடி வலைகள் பின்னப்படுகின்றன.

ஆசை காட்டி மோசம் செய்யும் 'டிஜிட்டல்' திருடர்கள்: இணையவழி மோசடிகள் பல முகங்களைக் கொண்டவை. "பல கோடி ரூபாய் லாட்டரி விழுந்துள்ளது" அல்லது "விலை உயர்ந்த கார் பரிசாகக் கிடைத்துள்ளது" என மின்னஞ்சல் அல்லது வாட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி, ஆசையைத் தூண்டுவார்கள்.

அந்தப் பரிசைப் பெற 'செயலாக்கக் கட்டணம்' செலுத்த வேண்டும் எனக் கூறிப் பணத்தைப் பறிப்பார்கள். அதேபோல், குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தருவதாகக் கூறி, போலி செயலிகள் மூலம் முதலீடு செய்ய வைப்பார்கள். தொடக்கத்தில் சிறிய லாபத்தைக் காட்டி நம்பிக்கையை வளர்த்துவிட்டு, பெரிய தொகையை முதலீடு செய்தவுடன் காணாமல் போய்விடுவார்கள்.

'டிஜிட்டல் கைது': ஒரு உளவியல் மிரட்டல் - சமீபகாலமாக அதிகரித்து வரும் ஆபத்தான மோசடி 'டிஜிட்டல் கைது' (Digital Arrest) ஆகும். உயர் போலீஸ் அதிகாரி போலத் தோன்றி, நீங்கள் ஏதோ சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டதாகக் கூறி வீடியோ காலில் உங்களை மிரட்டுவார்கள்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in