நுகர்வு வெறியும் மனித மாண்பின் வீழ்ச்சியும்

நுகர்வு வெறியும் மனித மாண்பின் வீழ்ச்சியும்
Updated on
2 min read

சத்து மாவில் வீரம், உதட்டுச் சாயத்​தில் காதல், தங்க நகைகளில் பாசம் என மனித உணர்​வு​களுக்கே விலைபேசும் போலி பிம்​பங்​களின் மாய உலகில் நாம் வாழ்ந்து​கொண்​டிருக்​கிறோம். மனிதரின் சுய உழைப்​பை​யும் உள்ளார்ந்த அன்பை​யும் அடியோடு புறந்​தள்​ளி​விட்டு, ‘பொருட்களே வாழ்​வின் வெற்றியைத் தீர்​மானிக்​கும்’ என்ற பொய்யை விளம்​பரங்கள் நம் ஆழ்மன​தில் விதைக்​கின்றன.

தாய்ப்​பால் ஊட்டாத பலத்தை​யும், தன்னம்​பிக்கை தராத அழகை​யும் ஒரு நுகர்​பொருள் தந்து​விடும் என்ற மாயவலை​யில் மனித மனங்​களைச் சிறைபிடித்​திருக்​கும் இந்த ஆரோக்​கியமற்ற வணிக உலகைப் பற்றிச் சிந்​திக்க வேண்டிய தருணம் இது.

“நான் எந்தத் தவறும் செய்யாத நிலை​யிலும், உன் பக்கத்​தில் இருந்த ஒரே காரணத்​துக்​காக... நீ அறுபட்ட செருப்​பாய் எறியப்​பட்ட​போது, நானும் தூக்கி எறியப்​பட்​டேன்!” என்ற ஒரு செருப்​பின் புலம்​பல், இன்றைய நுகர்வு வெறி​யின் கோர முகத்தை வெளிச்​சமிட்டுக் காட்டு​கிறது.

“பழு​தா​னாலும் பழுது​பார்த்து மீண்​டும் பயன்​படுத்து” என்ற நம் முன்னோர்​களின் உன்னதப் பண்பாடு மறைந்து, “பயன்​படுத்து; பயன் முடிந்​தால் தூக்கி எறி” (Use & Throw) என்ற பேராசை கலாச்சாரம் இன்று மேலோங்கி​விட்​டது.

இந்த நுகர்வுப் போக்கு பொருட்​களோடு நிற்​காமல், மனித உறவு​களை​யும் தூக்கி எறியும் கொடூரத்தை விதைத்​துள்ளது. அரக்​கோணத்​தில் உடல்​நலம் குன்றிய 72 வயது தாயைச் சுமை​யாகக் கருதி, ஓடும் ரயிலில் இருந்து தள்ளிக் கொன்ற மகனின் மனநிலை, நுகர்வு வெறி மனித மாண்​பையே சிதைத்​தெறிந்த அறவீழ்ச்சி​யின் உச்சத்தைக் காட்டு​கிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in