அறிவுக்குக் கொஞ்சம்...

அறிவுக்குக் கொஞ்சம்...
Updated on
2 min read

சமுத்ரயான்: விரைவில் முதல் பயணம் தொடக்கம்! - ஆழ்கடல் பரப்பிலுள்ள மகத்துவங்களைக் கண்டறியும் வகையில் தொடங்கப்பட்ட இந்தியாவின் சமுத்ரயான் திட்டத்தின் முதல்கட்டமாக, வரும் மே மாதத்தில் 500 மீட்டர் ஆழம் வரை பயணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

25 டன் எடை கொண்ட மத்ஸ்யா 6000 நீர்மூழ்கிக் கப்பலை இதற்காகத் தயார்படுத்தும் பணிகள் சென்னையிலுள்ள தேசியப் பெருங்கடல் நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

500 மீட்டர் ஆழத்தில் உள்ள அழுத்த விளைவுகள், வழிகாட்டல் அமைப்புகள் செயல்பாட்டை அறிய இப்பயணம் உதவும் என்றும் திட்ட இலக்கான 6,000 மீட்டர் ஆழத்தை அடுத்த ஆண்டு அல்லது 2027இல் அடைய வாய்ப்புள்ளதாகவும் தேசியப் பெருங்கடல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in