பெண்ணின் குமுறல்களை அறிவார் யாரோ?

பெண்ணின்  குமுறல்களை அறிவார் யாரோ?
Updated on
3 min read

காயத்ரிக்கு சிறு வயதிலிருந்தே சொல்லப்பட்டது ஒரே பாடம்தான். "பெண் என்றால் அடக்கம் மற்றும் நாணம் மட்டுமே; பாலுணர்வு, ஆசை என்ற பேச்செல்லாம் இருக்கக் கூடாது. அப்படிப் பேசினால் அது, உன் பெண்மைக்கே களங்கம்" என்ற வரிகள்தான் அந்த பாடம். கழுத்துச் சங்கிலியைப் போலவே, இந்த வார்த்தைகளையும் எப்போதும் தன்னோடு வைத்துக் கொண்டே வளர்ந்து, பெரியவள் ஆனாள் காயத்ரி.

அவளுக்கு திருமணம் செய்து வைப்பது பற்றி வீட்டில் பேசியபோது அவள் மனம் துள்ளியது. தன் மனதின் உணர்வுகளையும், உடலின் உண்மைகளையும் பற்றி, தான் இதுவரை யாரிடமும் பேசாத பல ரகசியங்களையும் வெளிப்படையாக பகிர்ந்துகொள்ள தன் உயிரின் பாதியைப் போன்ற கணவன் வரப் போகிறான். தன்னுடைய வாழ்க்கைப் பங்காளன் ஆன கணவன் விரைவிலேயே தன்னுடன் வந்து சேருவான் போன்ற எண்ண ஓட்டங்களே காயத்ரியின் உற்சாகத்துக்கு காரணம்.

பெரும் மகிழ்ச்சியோடு திருமணம் நடந்து முடிந்தது. மிகுந்த ஆசையோடு அவள் இல்லற வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்தாள். ஆனால், அவள் எதிர்பார்த்தது எதுவுமே நடக்கவில்லை. கணவன் அவளிடம் நெருங்குவதையே தவிர்த்தபோது, அவளுடைய கனவுகள் மீது பேரிடி விழுந்ததை உணர்ந்தாள்.

அடுத்தடுத்து பல இரவுகள் வந்தன. ஒவ்வொரு நாளும், தன்னைத் தவிர்த்து, கணவன் ஒதுங்கி செல்வதை அவளால் தாங்க முடியவில்லை. “தான் எந்தத் தவறும் செய்யவில்லையே. பிறகு ஏன் கணவனின் அன்பும், அரவணைப்பும் தனக்குக் கிடைக்கவில்லை” என்பதை நினைத்து அழுது களைத்துப் போனாள். கணவனைக் கவரும் அளவுக்கு தான் அழகாக இல்லையோ என்று கூட சில நேரங்களில் குழம்பிப் போனாள். தன்னைப் பற்றி அவன் என்ன நினைக்கிறான் என்பது கூட தெரியவில்லையே என்பதை நினைத்து நினைத்து தீயிலிட்ட புழுவைப் போல அவள்துடித்தாள்.

ஆனாலும், இது பற்றியெல்லாம் தனது கணவனிடம் கேட்கும் துணிச்சல் அவளுக்கு இல்லை. சிறு வயதில் பெற்றோர் சொல்லிக் கொடுத்து வளர்த்ததுதான் அவள் மனதில் ஆழமாக பதிந்திருந்தது. கணவனாக இருந்தால் கூட, இது பற்றியெல்லாம் வெளிப்படையாக எதுவும் பேசக் கூடாது என்றே அவள் நினைத்தாள். எனினும் அவன் ஏதாவது பேசுவான் என்று எதிர்பார்த்தாள். ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in