

1 ஒரு வழக்கின் விசாரணை காலதாமதமாவதற்கான முக்கிய காரணங்கள் என்ன? அதைத் தவிர்க்க பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன?
வழக்கின் விசாரணை என்பது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு விசாரணை என இரண்டு விதமாக பிரிக்கலாம். சிவில் வழக்கு விசாரணை என்பது நீதிமன்றம் வாதி, பிரதிவாதி ஆகியோரை பொறுத்தது.
இதில் வாதியோ, பிரதிவாதியோ காலம் தாழ்த்தினால் வழக்கு நிலுவையில் உள்ள நீதிமன்றத்திலேயே மனு தாக்கல் செய்யலாம் அல்லது உயர் நீதிமன்றத்தில் வழக்கை விரைந்து முடிக்க கோரி சிவில் ரிவிஷன் வழக்கு தாக்கல் செய்து நிவாரணம் பெறலாம்.