ட்ரம்ப் அதிரடி முதல் இயற்கை சீற்றம் வரை: உலகம் @ 2025 | மறக்க முடியுமா?

ட்ரம்ப் அதிரடி முதல் இயற்கை சீற்றம் வரை: உலகம் @ 2025 | மறக்க முடியுமா?
Updated on
4 min read

டிரம்ப்பின் நடவடிக்கைகள்:

* ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண் ணெய் வாங்குவதற்கு எதிர்வினையாகப் பெரும்பாலான இந்திய இறக்குமதிப் பொருள்களுக்கு 50% வரிவிதித்து (கூடுத லாக 25%) டிரம்ப் உத்தரவிட்டார். இதனால் இந்தியாவின் ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான ஏற்றுமதிகள் பாதிக்கப் பட்டிருக்கின்றன. பல தொழிற்சாலைகள் மூடப்படும் ஆபத்தான நிலை உண்டாகி இருக்கிறது.

* குடியேற்ற விதிகளில் அதிரடி மாற்றங்களை டிரம்ப் அரசு கொண்டுவந்தது. எச்1பி விசாவுக்கான ஓராண்டுக் கட்டணம் ரூ.1.32 லட்சத்திலிருந்து ரூ.88 லட்சமாக உயர்த்தப்பட்டது, இது இந்தியத் தொழில் நுட்பப் பணியாளர்களைப் பாதிக்கும் எனக் கருதப்படுகிறது.

* 39 நாடுகளுக்கு முழுமையான அல்லது பகுதி அளவு பயணத் தடை விதித்து ஆணை பிறப்பித்தார் டிரம்ப்.

* அமெரிக்காவில் நிரந்தரக் குடியுரிமை பெற ரூ.9 கோடி வழங்கும் தங்க விசா திட்டத்தை டிரம்ப் டிச.11இல் தொடங்கி வைத்தார்.

* அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் குடி யரசுக் கட்சி தாக்கல் செய்த பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நிறைவேறாத​தால், வரலாறு காணாத நிர்வாக முடக்கத்தை அமல்படுத்தி 43 நாள்கள் அமெரிக்காவை ஸ்தம்​பிக்க வைத்தார்.

* இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்து​வதில் வெற்றிகண்​டார்.

* உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர டிரம்ப் முயற்சி செய்தார். எனினும், அதிகாரபூர்வமான ஒருமித்த ஒப்பந்தம் எதுவும் கையெழுத்தாகவில்லை. ராணுவ உதவகளுக்குப் பதிலீடாக உக்ரைனின் கனிம வளங்களைப் பெற்றுக் கொள்ளும் ஒப்பந் தத்தைச் சாமர்த்தியமாக டிரம்ப் நிறை வேற்றிக்கொண்டார்.

எலான் மஸ்க் - டிரம்ப் மோதல்:

* அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசின் செலவினங்களைக் குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட புதிய துறைக்குத் தொழி லதிபர் எலான் மஸ்க் தலைமை வகித்து வந்தார்.

* அமெரிக்க பட்ஜெட்டில் மஸ்க் குழு பரிந்துரைத்த விஷயங்கள் எதுவும் இடம்பெறவில்லை. டிரம்ப்பின் புதிய வரி மசோதாவுக்கு மஸ்க் எதிர்ப்புத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து டிரம்ப் - மஸ்க் இடையே மோதல் வலுத்தது.

* மஸ்க் உடனான நட்புறவு முற்றுப் பெற்றுவிட்டதாக டிரம்ப் தெரிவித்தார். இதேபோல ‘தி அமெரிக்கன் பார்ட்டி’ என்கிற புதிய கட்சி தொடங்கப்போவதாக மஸ்க் அறிவித்தார்.

ஜென் இசட் போராட்டம்:

* ஊழல், வேலையின்மை, நிர்வாகச் சிக்கல்களுக்கு எதிராக ஜென் இசட் தலைமுறையினர் நடத்திய போராட்டங் களின் விளைவாக, 2025 செப்டம்பரில் நேபாள ஆட்சி கவிழ்ந்தது. பிரதமர் கே.பி. சர்மா ஒலி ராஜினாமா செய்தார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி இடைக்காலப் பிரதமராக நியமிக்கப்பட்டார். அடுத்த பொதுத் தேர்தல் 2026 மார்ச் 5 அன்று நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

காஸா போர்:

* இஸ்ரேல் - ஹமாஸ் இடையே தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தம் 2025 ஜனவரி 19 முதல் 42 நாள்களுக்கு அமலுக்கு வந்தது.

* அது முடிந்த பிறகு இரு தரப்பும் தொடர்ச்சியாகப் போர் தொடுத்தன.

* அக்டோபர் 13இல் எகிப்தில் நடை பெற்ற அமைதி மாநாட்டில் டிரம்ப் முன்னி லையில் காஸா அமைதி ஒப்பந்தம் உறுதியானது. அதன் பின்னர் மோதல் குறைந்து விட்டாலும் முற்றிலுமாக நிற்க வில்லை.

கம்போடியா - தாய்லாந்து எல்லை மோதல்:

* எல்லைப் பகுதியில் அமைந்துள்ள தா மோன் தாம் கோயிலுக்குப் பரஸ்பர உரிமை கோரி தாய்லாந்து, கம்போடியா வுக்கு இடையே நடந்துவரும் மோதல் 2025இல் தீவிரமடைந்தது. ஜூலை 28இல் போர் நிறுத்தம் ஏற்கப்பட்ட பின்பும் தாய்லாந்து வான்வழித் தாக்குதல் நடத்தி யது. பதற்றத்தைத் தணிக்க முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன.

எண்ணெய்ப் போர்:

* வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதியைத் தடுக்கும் நோக்கில் சர்வதேசக் கடற்பகுதியில் எண்ணெய் டாங்கர்களை அமெரிக்கக் கடற்படை பறிமுதல் செய்தது. 15,000 அமெரிக்க ராணுவத்தினர் கரீபியன் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். இது ‘கடற்கொள்ளை’, ‘ராணுவ ஆக்கிரமிப்பு’ என வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படையினரால் கைது செய்யப்பட்டார்.

உக்ரைன் போர் நிறுத்தம்? -

* உக்ரைனின் கிரிமியாவை ஆக்கிரமித்து அந்நாட்டின் மீதான படையெடுப்பை ரஷ்யா 2014இல் தொடங்கியது. 2022இல் இது தீவிரமடைந்தபோது உக்ரைன் எதிர்வினையாற்ற போர் மூண்டது. உக்ரைன் நேட்டோவில் இணைவதை ரஷ்யா தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதுவதே போருக்கான முதன்மையான காரணமாகச் சொல்லப்படுகிறது.

* போர் தொடங்கி நான்கு ஆண்டுகளில், 53,000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப் பட்டுள்ளனர். 37 லட்சம் மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர், 69 லட்சம் மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி அகதிகள் ஆகியுள்ளனர். இரு தரப்பிலும் லட்சக்கணக்கான ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

* போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் 28 அம்சங்கள் கொண்ட அமைதித் திட்ட முன்மொழிவை வெளியிட்டார்.

* போர் நிறுத்தத்தை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடை பெற்று வந்தாலும் 2025 டிசம்பர் வரை அதிகாரபூர்வமான ஒப்பந்தம் எதுவும் கையெழுத்தாகவில்லை.

30ஆவது காலநிலை மாநாடு:

* 30ஆவது ஐ.நா. காலநிலை மாநாடு (COP 30) பிரேசில் அமேசான் பகுதியைச் சேர்ந்த பெலெம் நகரில் நடைபெற்றது. உலகளாவிய வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸுக்குக் கீழ் குறைத்தல், பசுங்குடில் வாயு வெளியேற்றத்தைக் குறைத்தல் பற்றியெல்லாம் விவாதிக்கப் பட்டாலும் முக்கிய முடிவுகள் எட்டப்படாதது விமர்சனத்துக்கு உள்ளானது.

உலகை உலுக்கிய ரகசியங்கள்:

* சிறுமிகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றத்துக்காகச் சிறையில் அடைக்கப்பட்டு, அங்கு தற்கொலை செய்துகொண்டவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன். அவருடன் பல முக்கிய அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக வெளியான ஆவணங்கள் உலகை உலுக்கின.

இயற்கைச் சீற்றம்:

* சுமத்ரா தீவு, தெற்கு தாய்லாந்து, மலேசியாவை நவம்பர் இறுதியில் சென்யார் புயல் தாக்கியது. பெருமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

* வங்கக் கடலில் டிசம்பரில் உருவான டிட்வா புயலின் காரணமாக இலங்கையில் 638 பேர் உயிரிழந்தனர். பொருளாதாரரீதியாக அந்நாட்டுக்குப் பேரிழப்பு ஏற்பட்டது.

அறிவியல்:

* ஓபன் ஏஐ-யின் ஜிபிடி-4o, மெட்டா நிறுவனத்தின் லாமா ஏஐ-க்குப் போட்டியாக சீனாவின் டீப்சீக் ஏஐ மாடலின் குவென் 2.5- மேக்ஸ் என்கிற புதிய பதிப்பை வெளியிட்டது.

* அமேசான் தலைமைச் செயல் அலுவலர் ஜெஃப் பெசோஸின் விண்வெளி நிறுவனமான புளூ ஆரிஜின் மூலம் பெண் பிரபலங்கள் மட்டும் அடங்கிய குழு விண்வெளிக்குச் சென்றது.

* ஜெர்மனியைச் சேர்ந்த பொறியாளரும் விண்வெளி ஆராய்ச்சியாளருமான மைகேலா பெந்தாஸ் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தி விண்வெளி சென்ற முதல் நபர் என்னும் சாதனையை டிசம்பர் 22இல் படைத்தார்.

இந்தியாவும் உலகமும்:

* பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக அமெரிக்கா, மொரீஷியஸ் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றார்.

* இந்தியா - மலேசியா இடையே தீவிரவாத ஒழிப்பு, சைபர் பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு தொடர்பாக ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டன.

* நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பசிபிக் தீவு நாடான வனுவாட்டுக்கு இந்தியா 5,00,000 டாலர் நிதியுதவியை அறிவித்தது.

* இந்தியா - சீனா இடையேயான உறவு சீரடையத் தொடங்கியதை அடுத்து இந்தியப் பயணிகள் மீண்டும் திபெத் வர சீனா அழைப்பு விடுத்தது.

* இந்தியாவுக்கு வருகை தந்த ரஷ்ய அதிபர் புதின் டிச. 4இல் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசியதையடுத்து இந்திய-ரஷ்ய வர்த்தகத்தை ரூ.9 லட்சம் கோடியாக உயர்த்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

* இந்தியா-ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் டிச. 18இல் கையெழுத்தானது. இதன் மூலம் 99% இந்தியப் பொருள்களுக்கு ஓமன் வரி விதிக்காது.

* இந்தியா - பாகிஸ்தான் இடையே போரை நிறுத்த உதவியதாக அமெரிக் காவைத் தொடர்ந்து சீனாவும் கருத்து தெரிவித்தது. இதில் மூன்றாம் நாடு தலையீடு இல்லையென இந்திய அரசு டிச. 31 அன்று திட்டவட்டமாக அறிவித்தது.

பொது:

* கத்தோலிக்கத் திருச்சபையை வழிநடத்துவதற்கான 267ஆவது போப்பாக அமெரிக்காவைச் சேர்ந்த கார்டினல் ராபர்ட் பெர்வோஸ்ட் (69) தேர்வு செய்யப்பட்டார்.

* உலகில் முதல் நாடாக ஆஸ்திரேலியா வில் 16 வயதுக்கு உள்பட்டவர்கள் சமூக ஊடகம் பயன்படுத்தத் தடை விதிக்கப் பட்டது.

பதவியேற்பு, விலகல்:

* அமெரிக்காவின் 47ஆவது அதிபராகக் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் பதவி யேற்றார்.

* கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்தார்.

* கனடாவின் 24ஆவது பிரதமராக மார்க் கார்னி பதவியேற்றுக் கொண்டார்.

* நே​பாளத்தின் முதல் பெண் பிரதமர் ஆனார் சுசீலா கார்கி (73). அந்நாட்டின் முதல் பெண் தலைமை நீதிப​தி​யாகவும் பணியாற்றியிருக்கிறார்.

* ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி (64), 2025 அக்டோபர் 21இல் பதவியேற்​றார்.

* பாக். முப்படை தலைமைத் தளபதி யாக, அந்நாட்டின் ராணுவத் தளபதி அசிம் முனீர் டிச. 5இல் நியமிக்கப்பட்டார்.

ட்ரம்ப் அதிரடி முதல் இயற்கை சீற்றம் வரை: உலகம் @ 2025 | மறக்க முடியுமா?
பஹல்காம் முதல் மகா கும்பமேளா வரை: இந்தியா @ 2025 | மறக்க முடியுமா?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in