

இந்தியாவின் முதன்மை டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைத் தளமாக இருந்துவரும் யுபிஐ உலகெங்கும் கிளைகளைப் பரப்பி வருகிறது.
கூகுள் பே, போன் பே, பே டிஎம் உள்படச் சில செயலிகளும் பரபரப்பாக இயங்குகின்றன. இவற்றுக்கு நடுவே, ‘இதோ வந்துட்டேன்’ என்பதுபோலக் குதித்திருக்கிறது ’ஆப்பிள் பே’.
எப்படிப் பயன்படுத்துவது?
ஆப்பிள் ஐஃபோன், ஐபேட், ஆப்பிள் வாட்ச் பயன்படுத்து பவர்கள் கடைகளில் நேரடியாகப் பொருள் வாங்கினாலோ அல்லது செயலி, இணையத்தளம் மூலம் வாங்கினாலோ ஆப்பிள் பேவைப் பயன்படுத்திப் பணம் செலுத்த முடியும். ஒவ்வொரு முறையும் அட்டை எண், கடவு (Pin) எண், ஒற்றைப் பயன்பாட்டுக் கடவு எண் (OTP) அதற்குத் தேவையில்லை.
இது எளிதான பயன்பாடு மட்டுமின்றிப் பாதுகாப்பு, தனியுரிமை சேர்ந்தது என்று ஆப்பிள் உறுதிகூறுகிறது. ஆப்பிள் பே உடன் ஆக்சிஸ் வங்கி யின் விசா, மாஸ்டர் கடன் அட்டைகளை மட்டுமே இணைக்க முடியும். அவ்வாறு இந்தியா முழுவதும் இணையப் பரிவர்த்தனைகளில் ஈடுபடலாம்.