சட்டம் உணர்ந்த மனித வலி

சட்டம் உணர்ந்த மனித வலி
Updated on
2 min read

ஒரு பெரிய குடும்பம். அப்பா, அம்மா, மனைவி, இரண்டு சிறு குழந்தைகள். அந்தக் குடும்பத்தின் ஒரே ஆதாரம் அவன். நாள் முழுவதும் ஓட்டுநராக வேலை செய்து கிடைக்கும் அவனது வருமானத்தில்தான் ஐந்து பேரின் வாழ்க்கை சுழன்றது. ஆனால் ஒரு கண நேர விபத்து, அந்த வாழ்க்கையை முற்றிலும் புரட்டிப் போட்டது. வலது காலை இழந்தான். ஓட்டுநராக இருந்த ஒருவருக்கு கால் என்பது உறுப்பு மட்டுமல்ல உயிரும் கூட. உயிர் போன்ற காலை இழந்த பின் தொழில் இல்லை; வருமானம் இல்லை; குடும்பம் முழுவதும் நிராதரவாக நிற்கும் நிலை ஏற்பட்டது.

விபத்துக்குக் காரணமான பேருந்து உரிமையாளர் மீதும், காப்பீட்டு நிறுவனத்தின் மீதும் இழப்பீடு கோரி அவன் நீதிமன்றத்தை நாடினான். ஆனால் அவனிடம் மருத்துவரை அழைத்து சாட்சியம் கொடுக்கச் செய்ய பணம் இல்லை. மருத்துவ சான்றுகள் முறையாக தாக்கல் செய்யப்படவில்லை.

அப்போது நடைமுறையில் இருந்த சட்டப்படி, “நிரந்தர ஊனம் நிரூபிக்கப்படவில்லை” என்ற காரணத்தால், அவனுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு வெறும் ரூ.7,500 மட்டுமே. அது சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட கட்டாய இழப்பீடு. ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க அந்த இழப்பீடு எந்த விதத்திலும் போதுமானதாக இல்லை.

“இந்தத் தீர்ப்பு நியாயமல்ல” என்று அவன் மனம் சொன்னது. அதனால் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்தான். “கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா?” என்ற ஒரே கேள்வியைத்தான் அவன் நீதிமன்றத்தில் எழுப்பினான். அவன் முன்வைத்த இந்த வாதம் மிக எளிமையானது; அதே நேரத்தில் ஆழமானது..“என்னை பார்த்தாலே தெரியும். நான் காலை இழந்தவன்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in