வாசிப்பை ஊக்குவிக்கும் நாள்

வில்லியம் ஷேக்ஸ்பியர்
வில்லியம் ஷேக்ஸ்பியர்
Updated on
1 min read

பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவரும் ஸ்பானிய மொழியின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படுபவருமான மிகெல் டி செர்வாண்டிஸ்-ஐக் கெளரவிக்கும் வகையில் அவரது பிறந்தநாளாக நம்பப்படும் அக்டோபர் 7 அன்று, புத்தக நாள் 1926இல் முதல் முறையாகக் கொண்டாடப்பட்டது. செர்வாண்டிஸ் மறைந்த நாளாகக் கருதப்படும் ஏப்ரல் 23, 1930இல் புத்தக நாளானது. ஐநா-வின்துணை அமைப்பான யுனெஸ்கோ, 1995இல் பாரிஸ் நகரில் நடைபெற்ற அதன் பொது மாநாட்டில் ஏப்ரல் 23ஐ ‘உலகப் புத்தகங்கள் மற்றும் காப்புரிமை நாளா’க அங்கீகரித்தது. வில்லியம் ஷேக்ஸ்பியர், இன்றைய பெரூ நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் இன்கா காரிசிலாசோ டி ல வேகா ஆகியோரின் நினைவு நாளும் ஏப்ரல் 23 என்பதும் இதற்குக் காரணம்.

புத்தக வாசிப்பு, பதிப்பு, காப்புரிமை ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கான நிகழ்வுகளை இந்த நாளில் புத்தகத் துறையின் பிரதிநிதிகளுடன் இணைந்து யுனெஸ்கோ ஒருங்கிணைக்கிறது. புத்தக வாசிப்பையும் காப்புரிமையையும் மேம்படுத்துவதன் மூலம் படைப்பூக்கம், பன்மைத் தன்மை, அறிவைப் பெறுவதற்கான சம வாய்ப்பு ஆகியவற்றுக்குத் துணைபுரிகிறது. ஒவ்வோர் ஆண்டும் புத்தக வாசிப்பை மேம்படுத்துவதற்கு உகந்த நகரமாக ஏதேனும் ஒரு உலக நகரத்தை ‘உலகப் புத்தகத் தலைநகரம்’ என்று யுனெஸ்கோ அடையாளப்படுத்துகிறது. 2023ஆம் ஆண்டின் உலகப் புத்தகத் தலைநகரமாக கானா நாட்டின் தலைநகர் அக்ரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், வாசகர்கள், நூலகர்கள், அரசு, தனியார் அமைப்புகள், அரசு சாரா நிறுவனங்கள், புத்தகங்களுடன் தம்மைத் தொடர்புபடுத்திக்கொள்ள விரும்பும் பல்வேறு தரப்பினரின் பங்கேற்புடன் உலகப் புத்தக நாள் ஒவ்வோர் ஆண்டும் பரவலாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in