

l நீண்ட தொலைவு பயணம் செல்வதாக இருந்தால் அதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பிருந்தே எளிய உணவாகச் சாப்பிட்டு வயிற்றை நல்ல முறையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
l எளிதில் சீரணமாகக்கூடிய உணவையே பயணத்தின்போதும் சாப்பிட வேண்டும். வெளி உணவு ஏற்றுக்கொள்ளாதவர்கள் குறைந்தது ஒரு நாளுக்காவது வீட்டிலிருந்தே உணவைக் கொண்டு செல்லலாம்.
l எந்த ஊருக்குச் செல்கிறோமோ அந்த ஊரின் சிறப்பு உணவை ருசிப்பதில் தவறில்லை. அவை காரம், மசாலா போன்றவை குறைவாக இருந்தால் நல்லது. இல்லையென்றால் வயிற்றோட்டமும் வயிற்றுவலியும் அதற்கடுத்த நாள்களை நமக்குத் துன்பச் சுற்றுலாவாக மாற்றிவிடும்.
l தற்போது எல்லா இடங்களிலும் அனைத்து வகை உணவும் கிடைப்பதால் உணவகங்களில் வெகு அரிதாகக் கிடைக்கிற பாரம்பரிய உணவை மட்டும் சுற்றுலாத் தலங்களில் சாப்பிடலாம்.
l கூடுமானவரை அதிக உறைப்பு நிறைந்த சிப்ஸ், வறுத்த – பொரித்த உணவைத் தவிர்க்க வேண்டும். முழுதாக வேகவைக்கப்படாத உணவைச் சாப்பிடுவதும் நல்லதல்ல.
l ஆவியில் வேகவைக்கப்பட்ட உணவையும் எண்ணெய், உப்பு, காரம் குறைவான உணவையும் தேர்ந்தெடுப்பது நல்லது.
l சிலர் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும் என்பதால் பயணத்தின்போது போதுமான அளவுக்குத் தண்ணீர் குடிப்பதில்லை. இது தவறு. இது உடலில் நீரிழப்பை ஏற்படுத்திவிடக்கூடும். அதனால், தண்ணீர், மோர், எலுமிச்சை பானம் போன்றவற்றை அடிக்கடி குடிக்க வேண்டும்.
l கார்பனேற்றப்பட்ட திரவங்களைத் தவிர்க்க வேண்டும்.
l அபாரச் சுவையோடுஇருந்தாலும் அளவோடு சாப்பிடுவது நல்லது. சாப்பிட்ட மயக்கத்தில் சுற்றுலாவை ரசிக்க முடியாமல் போய்விடும்.
l சுற்றுலாத் தலங்களில் இருக்கும் உணவகங்களுக்குச் செல்வோர் ஆன்லைனில் இருக்கும் மதிப்புரைகளைப் படித்துவிட்டு முடிவெடுக்கக் கூடாது. அந்தந்த ஊரில் இருப்பவர்களிடம் கேட்டால் அவர்களே நல்ல உணவகங்களைப் பரிந்துரைப்பார்கள்.