

நுகர்வோரை மையப்படுத்தி திரைப்படங் களில் மிகைப் படுத்திக் காண்பிக்கப் படும் நகைச்சுவைக் காட்சிகளில் பல எல்லா காலத்திலும் வெவ்வேறு வடிவங்களில் நிஜ வாழ்வில் நடந்துகொண்டி ருப்பவைதாம். அப்படி வெளிவந்து கவனம் பெற்ற சில திரைப்பட காட்சிகள்...
‘வாத்தியார்’ திரைப்படக் காட்சி
மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் விற்பனை செய்யப்படும் தின்பண்டங்கள், ஊறுகாய் போன்றவற்றைச் சுவைத்துப் பார்த்துப் பிடித்திருந்தால் வாங்கிக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்துவார்கள். நாமும் சுவைத்துப் பார்த்துவிட்டு, நமக்குத் தேவையில்லாத நிலையிலும் வேறுவழியின்றி அந்தப் பொருளை வாங்கிவந்து விடுவோம்.
‘சத்ரபதி’ திரைப்படக் காட்சி
முன்னணி நிறுவனத் தயாரிப்பு என்று சொல்லி செய்முறை விளக்கத்துடன் பொருளை நமக்குக் காண்பிப்பார்கள். அதனை வாங்கி வீட்டுக்கு எடுத்து வந்து இயக்கிப் பார்த்த பிறகு தான் நாம் மோசம் போயிருப்பது தெரியவரும்.
‘சதுரங்க வேட்டை’ திரைப்படக் காட்சி
ஏமாறுகிறவர்கள் இருக்கிறவரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். குழந்தைகளையும் பேராசைக்காரர் களையும் அவ்வளவு எளிதில் திருப்திப்படுத்த முடியாது. ‘சதுரங்க வேட்டை’யில் அதைச் சிறப்பாகக் காட்சிப் படுத்தியிருப்பார்கள்.
‘பாஸ் என்கிற பாஸ்கரன்’
கடன்களை வாங்குவதற்குச் சாமானிய மக்கள் வங்கிகளுக்குக் கால் தேயும் அளவுக்கு நடக்க வேண்டி இருக்கும். அதே நேரத்தில் காத்திருக்கத் தேவை யில்லாமலேயே பெரும் பணக்காரர்களுக்குப் பல கோடி ரூபாயை வங்கிகள் கடனாக வாரிக் கொடுக்கும். இந்தக் கடன் வழங்கலில் சிறப்பாகச் சேவை செய்த வங்கிப் பணியாளர் அல்லது கிளைக்குப் பாராட்டு விழா வேறு நடத்துவார்கள்.