மகளிர் காவல் துறை 50

மகளிர் காவலர்களின் முதல் அணிவகுப்பு
மகளிர் காவலர்களின் முதல் அணிவகுப்பு
Updated on
1 min read

தமிழ்நாட்டில் காவல் துறையில் 1973இலிருந்து பெண்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். இந்தாண்டு தமிழ்நாடு மகளிர் காவல் துறைக்குப் பொன்விழா ஆண்டு. 1973இல் முதன்முதலாகப் பெண்கள் 20 பேர் காவலர் பணிக்குத் தேர்ந் தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு ஓராண்டு பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சிக்குப் பிறகு 1974 நவம்பர் 1இல் மகளிர் காவலர்களின் முதல் அணிவகுப்பு சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடந்தது. பெண் காவலர் அணிவகுப்புக்கு உதவி ஆய்வாளர் உஷாராணி தலைமை தாங்கினார்.

1992இல் மாநிலத்தின் முதல் மகளிர் காவல் நிலையம் சென்னை ஆயிரம் விளக்கில் தொடங்கப்பட்டது. 1976இல் தமிழ்நாடு பிரிவில் முதன்முதலாக இந்தியக் காவல் பணி அதிகாரிகளாக திலகவதியும் லத்திகா சரணும் பொறுப்பேற்றனர். தமிழ்நாட்டின் முதல் இந்தியக் காவல் பணி அதிகாரி திலகவதி ஆவார். இந்திய அளவில் சண்டிகருக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில்தான் பெண் காவலர்களின் எண்ணிக்கை அதிகம். தமிழ்நாட்டின் மொத்த காவலர்களில் 19.4 சதவீதத்தினர் பெண்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in