அறிவியல் மொழியில் அனைவரும் பேசினால்...

அறிவியல் மொழியில் அனைவரும் பேசினால்...

Published on

நம் அனைவருக்கும் தனித்தனிப் பெயர்கள் இருந்தாலும் அறிவியலைப் பொறுத்தவரைக்கும் நம் எல்லோருக்கும் ‘ஹோமோ சேப்பியன்ஸ்’ என்கிற ஒரே பெயர்தான். நம்மைப் போலவே செடி, கொடி, மரங்கள், பூச்சிகள், பறவைகள், விலங்கினங்கள் போன்றவற்றின் பெயர் ஊருக்கு ஏற்ப நிலத்துக்கு ஏற்ப மாறுபட்டாலும் அவற்றை அறிவியல்ரீதியாக அடையாளப்படுத்துவதற்காக இருசொல் அறிவியல் பெயரைச் சூட்டியிருக்கிறார்கள். அதேபோல் தனிமங்கள், சேர்மங்கள், வாயுக்கள் போன்றவற்றுக்கும் வேதியியல் பெயர்கள் உண்டு. உதாரணத்துக்கு, நமக்குத் தண்ணீராகத் தெரிவது ஆய்வகத்தில் இருப்போருக்கு H2Oவாகத் தெரியும். நாம் கரப்பானைப் பார்த்து அலறினால், அவர்களோ ‘ஓ பெரிபிளானெட்டாவா?’ என்று சொல்லிவிட்டுச் செல்லலாம். இப்படி ஆய்வாளர்களின் பயன்பாட்டில் உள்ள அறிவியல் பெயர்களை நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்திப் பார்த்தால் எப்படி இருக்கும்?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in