புறக்கோள்கள் 6000

புறக்கோள்கள் 6000
Updated on
1 min read

சூரியனைத் தவிரப் பிற நட்சத்திரங்களைச் சுற்றிவருபவை புறக்கோள்கள் (exoplanet) எனப்படுகின்றன. ஒரு நட்சத்திரத்தைச் சுற்றிவரும் இரண்டு கோள்கள் கண்டறியப்பட்டதுடன் இந்தத் துறையின் பயணம் தொடங்கியது.

1995இல், ஒரு சாதாரண நட்சத்திரத்தைச் சுற்றி வரும் புறக்கோள் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் நாசாவின் கெப்ளர், TESS போன்ற (2018ஆம் ஆண்டு ஏவப்பட்ட இது, பூமி அளவிலான, சூப்பர்-பூமி உள்பட ஆயிரக்கணக்கான கோள்களைக் கண்டறிந்து, வானத்தை ஆய்வு செய்வதைத் தொடர்கிறது) விண்வெளிப் பயணங்கள் மூலம் இந்தக் கண்டறிதல்கள் வேகமடைந்தன.

2022 மார்ச்சில் 5,000 என்கிற எண்ணிக்கை எட்டப்பட்டது. புறக்கோள்கள் தற்போது 6,000ஐக் கடந்துள்ளன. பால்வீதியில் இருக்கக்கூடிய நூறு பில்லியன் கோள்களுடன் ஒப்பிடும்போது, இந்த எண்ணிக்கை குறைவாகத் தெரிந்தாலும், மனித அறிவியல் கண்டறிதல்களில் இது ஒரு பெரிய மைல் கல்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in