

யாராவது 10 இந்திய அறிவியலாளர்கள் பெயரைக் கேட்டால் நம்மால் பட்டியலிட முடியுமா? ஒருவேளை அப்படிப் பட்டியலிட முடிந்தால் அவர்களில் பெரும்பாலோர் விண்வெளி அறிவியலாளராகவோ, ராணுவ அறிவியலாளராகவோ இருப்பார்கள். அறிவியல் என்பது பரந்துவிரிந்த ஒரு துறை. அதுவே உலகை இயக்குகிறது. பத்து வெவ்வேறு அறிவியல் பிரிவுகளைச் சேர்ந்த அறிவியலாளர்களை நம்மால் எளிதில் பட்டியலிட முடியாது.
காரணம் நம் நாட்டில் அறிவியலாளர்கள் கொண்டாடப்படுவதில்லை, அவர்களுக்கு அரிதாகவே ஊடக வெளிச்சம் கிடைக்கிறது. இந்தப் பின்னணியில் இந்தியப் பெண் அறிவியலாளர்களைத் தேட முயன்றதன் விளைவாக ஒரு நூல் உருவாகியுள்ளது. ‘31 Fantastic Adventures in Science: Women Scientists in India’ என்கிற தலைப்பில் ஆங்கிலத்தில் Penguin Random House India நிறுவனம் வெளியிட்ட அந்தப் புத்தகம் பிரபலமானது. தற்போது தமிழில் வெளியாகியுள்ளது.