தனித்துவமான அஞ்சல் நிலையங்கள்

தனித்துவமான அஞ்சல் நிலையங்கள்
Updated on
1 min read

 இந்தியாவில் முதல் அஞ்சல் நிலையம் 1764ஆம் ஆண்டு அன்றைய பம்பாயில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தால் நிறுவப்பட்டது.

 இந்தியாவின் மிதக்கும் அஞ்சல் நிலையம் நகரில் உள்ள தால் ஏரியில் அமைந்திருக்கிறது. படகு மீது அமைக்கப்பட்டுள்ள இந்த அஞ்சல் நிலையம் 2011ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. இது அஞ்சல் அலுவலகம், அஞ்சல்தலை சேகரிப்பு அருங்காட்சியகமாகவும் செயல்படுகிறது.

 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ‘ஹிக்கிம்’, கடல் மட்டத்திலிருந்து 15,500 அடி உயரத்தில், உலகின் மிக உயரமான அஞ்சல் நிலையமாக இருக்கிறது. இங்கு தபால் பெட்டி வடிவில் அஞ்சல் நிலையம் செயல்படுகிறது.

 புது தில்லி சாஸ்திரி பவனில் முழுக்க முழுக்கப் பெண்கள் மட்டுமே பணிபுரியும் அஞ்சல் நிலையம் இருக்கிறது.

 தட்சிண் கங்கோத்ரி அஞ்சல் நிலையம் இந்தியாவுக்கு வெளியே அண்டார்க்டிகாவில் அமைதிருக்கிறது. இது 1983ஆம் ஆண்டு இந்திய ஆராய்ச்சியாளர்கள் மூன்றாவது முறையாக அண்டார்க்டிகாவிற்குச் சென்றபோது உருவாக்கப்பட்டது.

 டார்ஜிலிங்கில் உள்ள அஞ்சல் நிலையம் இயற்கை எழில் கொஞ்சும் மலைவாசஸ்தலத்தில் மிக அழகான அஞ்சல் நிலையமாக இருக்கிறது. இது காலனிய கால கட்டிடக்கலையின் அடிப்படையில் கட்டப்பட்டிருக்கிறது.

 கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் உள்ள அருங்காட்சியக சாலையில் அமைந்திருக்கும் அஞ்சல் நிலையம் மதியம் 1 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்குகிறது.

 ஜம்மு காஷ்மிரில் இருக்கும் ‘கேரான்’ அஞ்சல் நிலையம், இந்தியாவின் கடைசி அஞ்சல் நிலையமாக அறியப்பட்டது. தற்போது அது முதல் அஞ்சல் நிலையமாக அறியப்படுகிறது.

 கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் 1,100 சதுர அடி பரப்பளவில் 3டி தொழில்நுட்பத்துடன் இயக்கும் அஞ்சல் நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in